பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

66
1ம் சங்கீதம்.
'எத்தனை திரளென்' என்ற மெட்டு
தன்னியாசி - ஆதி.

பல்லவி

1பாக்கியவான் பரன் பதமலும் பகலுமே
பரிந்து தியானஞ் செய்வான்

அனுபல்லவி

மூர்க்கரா லோசனை முகந்தவர் வழி நில்லான்
முகம்பரிகசிப்பவர் முன்னே யுட்காரச் செல்லான்

சரணம்

2நீர்க்காலின் ஓரமாய் நிறுத்தப்பெற்றுறுகாலம்
நிதிபெறு கனிகள் தந்து
சேர்க்கையிலை யுதிராச்செழுமரம் போலிருப்பான்
செய்வதெல்லாமே வாய்க்கும் சிந்தித்தபடி வந்து

3பாதகர் காற்றடிக்கும் பதராவர் தீர்ப்பில் நில்லார்
பாவிகள் நீதர்முன் நில்லார்
நீதிமான் வழிகளை நின்மலன் அறிந்துள்ளார்.
நெடிய துன்மார்க்கர் தீய நெறிகள் நொடியும்நில்லா

67
23ம் சங்கீதம்.
'ராம பஜன கோரியாம்' என்ற மெட்டு.

பல்லவி
ஏக பரம பாக்கியம் இந்தச்சிலாக்யம்

சரணம்

1ஏகோவா எந்தன் மேய்ப்பர் எதுந்தாழ்ச்சி யடையேன்
வாகான புன்னில மேய்த்து வாவிவிடுவார்.

2என்றன் ஆந்துமந்தேற்றி எனை நீதி நடத்துவார்
நன்னய மாகத் தமது நாமநிமித்தம் (ஏ)