உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடிப்பு:

அண்ணா வாழ்வு கடமை வாழ்வு!
அவர்தம் உடலைப் புற்றுநோய் அரித்துத்
தின்னும் பொழுதும் கடமையைச் செய்யத்
தவறாக கடமை வீரர்நம் அண்ணா!
யாழ்இருப் பதுஇசைத்து மகிழவே!
நூல்இ ருப்பது படித்து மகிழவே
உடல்இ ருப்பது கடமை செய்யவே!
என்றுதன் தம்பிக்கு எழுதிக் காட்டினார்!
அந்தஅண் ணாவின் வழியில் அருமைத்
தமிழைத் துறைதொறும் வளர்க்கும் கடமை
செய்திடு வோம்!தமிழ் இனநலம் காப்போம்
நாடொறும் நாட்டுக் கடமைசெய் குவமே!


கவிஞர். அ. மணிமேகலை - அறிமுகம்


வையகம் முழுதும்உள் நின்று வருத்திடும்
பசியினை மாற்றி அறவேள்வி செய்து
சிறைச் சாலை யாவையும் அறச்சாலை யாக்கிய
மாதவச் செல்வி மணிமே கலையை
நினைவிற் கொணர்ந்து நீள்பசிப் பிணியை
எதிர்த்துப் போராட எம்மையும் தூண்டும்
செந்தமிழ்ச் செல்வி மணிமே கலை, இவண்
அண்ணா வழியில் பண்பா டிதுவெனக்
காட்ட வருகிறார்! வருக! வருக!
மணிவார்த் தைகளால் ஆனநற் கவிதை
தருக! தருக! தழைகபண் பாடே!

முடிப்பு:

பணிவொடு இன்சொல் அடக்கம் இவை, பண்
பாட்டின் வாயில்கள் நம்தலை முறையில்