பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொட்டைத் தலை, காவி உடை, இந்தத் தோற்றத்துடன் கந்தசாமிப் பரதேசி ஜெபம் செய்து கொண்டிருக்க, அச்சமயம் திருப்பரங்குன்றத்துக்கு வந்த பக்தர்களுக்கு இலக்கு உடைய பரதேசியாக அவரைக் கருத இயலவில்லை! பிழைப்புத் தேடும் பிச்சைக்காரச் சாமியாராகவே எண்ணி, விரிந்திருந்த துண்டில் காசுகள் போட்டுச் சென்றனர். அன்று பத்து அணா வரை காசுகள் விழுந்திருந்தன. கந்தசாமிப் பரதேசியின் நிலை-மெல்லவும் முடியவில்லை-விழுங்கவும் முடியவில்லை. ஆனாலும், துக்கத்தை அனுபவிக்காமல் இல்லை. யாத்திரை திருநெல்வேலிக்குத் தொடர்ந்தது! மாதம்-ஆடி மாதம்! -திருநெல்வேலியில் தங்கல்- ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் சென்று புனித நீராட எண்ணம்! எண்ணம் செயலானது. நெல்லையிலிருந்து, நெல்லைப் பகுதியின் தருமை ஆதீன மேலாளர் கே.பி. மகாலிங்கம் பிள்ளை உடன் வந்தார்.

கே.பி. மகாலிங்கம் பிள்ளை கந்தசாமிப் பரதேசியிடம் பிரியமாக இருந்தார். பக்குவமாக வீட்டில் சமைத்துக் . கொண்டு வந்து சாப்பாடு கொடுத்தார். பாணதீர்த்தத்துக்குச் செல்ல இன்று இருப்பதுபோல அன்று வசதிகள் இல்லை.. சொரிமுத்தய்யன் கோயிலுக்கு நடந்துதான் போக வேண்டும். ஆடி அமாவாசைக்கு முதல் நாள் இரவே பாணதீர்த்தத்துக்குச் சென்று சேர்ந்தாயிற்று. நாணற்புற்களாலான சிறுசிறு குடிசைகள் 25 ரூபாய் வாடகை! மூன்று குடிசைகள் எடுத்துத் தங்கினோம்.

மறுநாள் காலை. பாணதீர்த்தத்தில் நீராடி வழிபாடு முதலியவை முடித்துக் கொண்டு பயணம். தேசிகரும் பிள்ளையும் மெதுவாக நடந்து வந்தார்கள். கந்தசாமிப் பரதேசியின் நடை எப்போதுமே வேகம்தான். இப்போதுதான் சொரிமுத்தய்யன் கோயிலருகில் கந்தசாமிப் பரதேசி