பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

133


விட்டார். அன்று காலை வழக்கம்போல் கந்தசாமித் தம்பிரான் படிக்கவில்லை என்கிறார் “காலையில் விளக் கெரிந்ததே...?" என்று முருகையா கேட்கிறார். கந்தசாமித் தம்பிரான் சதுரப்பாட்டுடன் “எறும்பு கடித்தது. விளக்கு போட்டுப் பார்த்தேன்" என்று கூறுகிறார். அருள்திரு சோமசுந்தரம் தம்பிரானும் சரி, முருகையாவும் சரி, நம்ப வில்லை, பொய் சொன்னதாகவே அன்றும் சொன்னார்கள்.... இப்போதும் சொல்வார்கள். இப்படியெல்லாம் கல்வியில் ஆர்வம் காட்டியதால் அந்தப் பொய் 'பொய்ம்மையும் வாய்மை யிடத்த' என்னும் குறள் நெறிப்படி அமைந்தது என்பது அமைதி.

சீகாழியில் கட்டளைத் தம்பிரான் ஆன பிறகு, வாரத்தில் ஒரு நாள் சீகாழிக்குச் செல்வது வழக்கம். கல்லூரி விடுமுறைக் காலங்களில் சீகாழியில் தங்கும் கடப் பாட்டினையும் கந்தசாமித் தம்பிரான் ஏற்றுக்கொண்டார். தருமபுர ஆதீனத்தின் வில்வண்டியில் சீகாழிக்குச் செல்வது வழக்கம். ஒன்றே முக்கால் மணி நேரத்தில் வண்டி போய்ச் சேரும்.

கட்டளைத் தம்பிரான்களுக்குச் சில மரியாதைகள் உண்டு, கட்டளைச் சேவகர் உண்டு. அப்போது கட்டளைச் சேவகராக வேலை பார்த்தவர் கோவிந்தராசன் என்பவர். இவர் இப்போது சீகாழித் திருக்கோயிலில் பணி செய்கிறார். சீகாழி சைவத் தமிழுலகின் புண்ணியத் திருத்தலம். திருஞானசம்பந்தர். திருஅவதாரம் செய்த திருத்தலம், அது மட்டுமா? 'அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, திருஞானசம்பந்தர் அழுது உமாதேவியே ஞானப்பால் தரக் குடித்தார், இந்தத் திருத்தலத்தில், சைவ சமயத்தில் எத்தகைய மனிதநேயம்!

ஒரு குழந்தை அழுகிறது. அந்த அழுகையைக்கூடத் தாங்கமுடியாத நிலையில் அம்மையப்பனே எழுந்தருளி