பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

139



திருத்தலங்களுக்குச் சென்றால் வழிபாட்டில் காட்டும் ஆர்வத்தைவிட உழவாரத் தொண்டில் காட்டும் ஆர்வமே மிகுதி.

ஆம்! ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகளால் தொடங்கி வைக்கப்பெற்ற உழவாரத் தொண்டு இன்றும் தேவைப்படுகிறது. -

திருஞானசம்பந்தருக்குப் படையல் செய்த திருவமுது, உழவாரத் தொண்டர்களுக்கு மதிய உணவாயிற்று. உழவாரத் தொண்டு தொடர்ந்து நடைபெற்றது. மாலை நான்கு மணி இருக்கும். திருக்கோயில் அலுவலகச் சேவகர் ஓடிவந்து, "மகாசந்நிதானம் வந்திருக்கிறார்கள். திருஞானசம்பந்தர் கோயிலுக்கு நேரே வந்து கொண்டிருக்கிறார்கள். என்ற செய்தியைச் சொன்னார். சிந்தைக்கினிய செவிக்கினிய செய்தியல்லவா?

திருஞானசம்பந்தர் திருக்கோயிலுக்கு மகாசந்நிதானம் எழுந்தருளி நேரே திருஞானசம்பந்தர் சந்நிதிக்குச் சென்று வழிபாடு செய்துகொண்டார்கள். திருக்கோயில் முழுதும் பார்த்துவிட்டு, கந்தசாமித் தம்பிரான் எதிர்பார்க்காத நிலையில் பல திருப்பணிகளுக்கு நிதியாணைகள் வழங்கி னார்கள். "எல்லாம் வாயுவேகத்தில் நடைபெற வேண்டும். திருவிழாவின்போது திருஞானசம்பந்தருக்கு நூறாயிரம் போற்றி (லட்சார்ச்சனை) செய்யவேண்டும். திருமுறைப் பாராயணம் அகண்ட வேள்வி நடத்தவேண்டும்” என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்தார்கள். எல்லோருக்கும் மகிழ்ச்சி! தொடர்ந்து வேலை நடந்தது இனிதே நிறைவெய்தியது.

திருஞானசம்பந்தருக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. கந்தசாமித் தம்பிரான் திருமுறை வகுப்பு தொடங்க எண்ணினார். அப்போது திருக்கோயிலில் சட்டநாத தேசிகர் என்பவர் ஒதுவாராகப் பணி செய்தார். கந்தசாமித்