பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொற்கிண்ணம்

சிவானந்த அனுபவத்தில் திளைத்த மாணிக்க வாசகருக்கு உலகியல் சான்றுகள் எளிதில் கிடைக்கின்றன; அவர் மிகச் சிறந்த உண்மைகளை விளக்க எடுத்தாளும் உவமைகள் எளியனவாக இருக்கின்றன- நடைமுறையை ஒட்டியனவாகவும் இருக்கின்றன என்பது உணர்ந்தின்புறத் தக்கது.

உலகியலில் அறியா மக்கள் தாம் முயன்று பெற்றவற்றையேகூட அருமை கருதித் தொடர்ந்து போற்றிக் காப்பாற்றுவதில்லை. மிக மோசமான இயல்புடைய மக்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் எதையும் அதனுடைய தகுதியறிந்து போற்றுவதில்லை. பன்றியின் முன்னே முத்தை வாரியிறைத்தது போலவும், கழுதையின் மீது குங்குமப் பூவைச் சுமத்தியது போலவும் ஆகிவிடும், அறியா மாக்களுக்குச் சான்றோர் செய்யும் உதவிகள். பலகால் கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பு பொதுவாக மக்களிடத்து இருப்பதில்லை. அருமையை உணர்ந்து பாராட்டுவதற்குப் பதிலாக அந்த உதவியைச் செய்யும் இயல்புக்கும் ஏதாவதொரு உள்நோக்கம் கற்பித்துக் களங்கப்படுத்தவும் செய்கின்றனர். இவ்வாறு கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பினை, மாணிக்கவாசகர் தம்முடைய அனுபவத்தின் மீதேற்றி விளக்குகிறார்.

ஒரு செல்வந்தரின் வீடு-தங்கம் தாராளமாகப் புழங்கும் வீடு-ஒரு நாள், வீட்டுத்தலைவி சாமான்களை எண்ணிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் அருகில் இருந்த அவளுடைய அருமைக் குழந்தை அங்கிருந்த பொருள்களில் ஒன்றாகிய தங்கக் கிண்ணத்தை விரும்பிக் கேட்டது. தாயும் கொடுத்தாள். குழந்தை தங்கத்தின் மதிப்பறிந்து கேட்க வில்லை. ஏதோ ஒரு பொருள். மற்றவர்கள் வைத்திருக்