பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

289



ஆதலால் நாடகத்தால் அடியார் போல் நடிப்பவர்கள் உண்மையான திருவருள் இன்பத்தைப் பெறமுடியாது. உண்மைத் திருவருள் இன்பத்தைப் பெற வேண்டுமென்றால், இறைவனிடத்தில் உண்மையான அன்பு கொள்ள வேண்டும். அத்தகு அன்பினை உள்ளத்தில் தோற்றுவித்து அருள் வழங்கி ஆட்கொள்ளும் வண்ணம் மாணிக்கவாசகர் பிரார்த்திக் கிறார். பாடலைப் பாருங்கள்:

தாராயுடையா யடியேற்கு
உன்தாள் இணையன்பு
போரா வுலகம் புக்காரடியார்
புறமே போந்தேன் யான்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங்கு
உன்தாள் இணையன்புக்
காராயடியேன் அயலே
மயல்கொண் டெழுகேனே!

-திருவாசகம்
இருகை யானை

சிவநெறி சிந்தைக்கினியது - உயிர்களுக்கு உய்வு தரும் நெறி, மயக்கங்களினின்றும் விடுபெற்ற ஒரு நெறி. சிவநெறி, தத்துவம் விளக்கும் சாத்திரங்களும் அருளார்ந்த அனுபவத்தைத் தந்து உயிர்களை விளக்கமுறச் செய்யும் திருமுறைகளும், பெற்றுத் திகழும் பெருநெறி.

சைவத் திருமுறைகளுள் மிகச் சிறந்தது திருவாசகம். திருவாசகம் ஒரு அனுபவப் பொதிவு-ஞானப் புலம்பல். அது, உணர்த்தும் நூலன்று-உணரச் செய்யும் நூல். அனுபவத்தைச் சொல்லும் நூலன்று, இன்ப அனுபவத்தை விளைவிக்கும் நூல். இத்தகு திருவாசகம் ஒதுவோரை உயர்த்தும் ! திருவாசகம், சைவம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் மூன்று பொருள்களை (இறை, உயிர், தளை)யும் தக்க உவமைகளுடன் காட்டி விளக்குவதில் சிறந்தது. ஆன்மாவை, உயிர் நெறியைப்