பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

351


தான் இருக்கும். நமது அடுத்த தலைமுறைக்கும், நஞ்சினும் கொடிய வறுமையை, ஏழ்மையை வழிவழியாக விட்டுச் செல்லும் பாவத்தைச் செய்தவர்களாவோம்.

இன்னும் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் சரி, சமூக வாழ்க்கையிலும் சரி, அரசும் சரி, "ஏழ்மை பிரதேசமே இல்லை" என்று அறிவிக்கக்கூடிய அளவுக்கு, எல்லாப் பணிகளையும்விட வறுமை ஒழிப்புப் பணியை இதுவே முதற்பணி என்று கருதிச் செயல்பட வேண்டும்.

பொருளாதாரத்திற்குப் பல தடைகள் உண்டு. அவற்றில் தலையாயது பழைய நம்பிக்கைகள் - அதாவது ஊழ், விதி முதலியவற்றை நம்பி, பொருளாதார முயற்சி களைக் கைவிடுவது அல்லது சோர்ந்து போதல், மேலும் கடவுள், ஊழ் என்று வாளா இருப்பது.

கடவுள் உயர் ஆற்றல், உயர் பண்பே தவிர, கடவுள் பணம், செல்வம், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் லேவாதேவிக்காரரும் அல்ல-இரவலர்களை ஊக்குவிக்கும் வள்ளலும் அல்ல. போதிய முதலீடு வேண்டும்.

அடுத்து சிறந்த அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும். நமது நாட்டில் அறிவியல் மேதைகள் நிறைய உண்டு. அறிவியல் தொழில் நுட்பங்களும் உண்டு. முதலீட்டுக்குப் பஞ்சமே இல்லை. நிறைய முதலீடு செய் வதற்குரிய பணம் இருக்கிறது. ஆனால் பொருளாக்கத்திற்குத் துணை செய்யும் வழியில் முதலீடு செய்ய முன் வருவதில்லை.

மனித ஆற்றல் நம்மிடத்தில் நிறைய உண்டு என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆயினும் பொருளாதார வளர்ச்சி மனநிறைவு தரத்தக்க வகையில் இல்லை. நல்ல நிர்வாகமும், கடின உழைப்பும் தேவை.

அடுத்து ஒரு தொழிலில் லாபம் என்றால், ஆட்டு மந்தைகளைப் போல அந்தத் தொழிலிலே பலரும் முயன்று, அந்தத் தொழிலில் உற்பத்தியைப் பெருக்கி, விலையை