பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

377



இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் வேலை நாட்களும் குறைவு. பால் உற்பத்தியை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையில் பால் மூலம் கிடைக்கும் ரொக்கப் பணம் மொத்த வருமானத்தைக் கூடுதலாகத் தரும். அதுமட்டுமன்றி ஆண்டு முழுவதும் வருமானம் தரும்.

நாட்டினை வளப்படுத்தும் பாதையில் பலதரப்பட்ட தொழில்கள் இருந்தாலும் விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும்தான் இன்னும் முன்னணியில் உள்ளன

கால்நடை வளர்ப்புக்கு அனுசரணையான வேளாண்மைக் காடுகளிலும் அதைச் சார்ந்த தொழில்களிலும் நாட்டின் 60 விழுக்காடு மக்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டு மக்கள் தொகையில் 60 விழுக்காடு மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது கால்நடைகள் வளர்ப்பும், கால்நடை சார்ந்த தொழில்களுமேயாம்.

தமது நாட்டு மக்களுக்கு - விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு அறிவியல் சார்ந்த தொழில் என்பதை உணர்த்த வேண்டும். கால்நடைகளை அறிவியல் சார்ந்த வகையில் வளர்க்காவிடில் போதிய பயன் தாரா வருவாயும் தாரா.

பழங்காலத்தில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையின் துணைத் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று, கால்நடை வளர்ப்பு, வியாபார நோக்கத்துடன் கூடிய ஒரு தொழில் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டது.

கால்நடைகளில் கலப்பினம், கால்நடை வளர்ப்பில் புதிய நெறிமுறைகள் - உத்திகள், நோய்த் தடுப்பு முறை, கால்நடை அடிப்படையிலான புதிய புதிய தொழில்கள் ஆகியன நாளும் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வளரும்.

இத்தகு அறிவியல் சார்ந்த பேணலால் - பராமரிப்பால், 1970-1971-ல் 93,400 டன்னாக இருந்த பால் உற்பத்தி, 3,37,500 கு xvi 25 கு xvi 25