பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

487



11. சிந்தனைச் செல்வம்
1983-ஏப்ரல்

முன்னுரை


டாக்டர். வா.செ. குழந்தைசாமி, துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600 025.


தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆழ்ந்த சிந்தனை யாளர். அடிகளார் சமயத் துறையின் தலைமை மாளிகை களில் புதிய சாளரங்களைத் திறந்தவர். வெயிலும், ஒளியும், புயலும், காற்றும் சமுதாயச் சூழலில் மட்டுமன்று; சமயச் சூழலிலும் இயல்பானவையே; ஏற்கத் தக்கவையே என்ற மனம் கொண்டவர்.

அறிவுலகத்தின் ஆய்விற்கும், வளரும் சமுதாயத்தின் மாற்றங்கட்கும், சமயங்கள் புறம்பானவையல்ல. இவற்றின் தாக்கங்கட்கு ஈடு கொடுத்து, சமய மரபுகள் நிற்க வேண்டுமேயன்றி, இவற்றினின்றும் பாதுகாக்கப்பட வேண்டுவன அல்ல எனும் துணிந்த உள்ளத்தினர். எனவே பகுத்தறிவு மேடையோ பொது உடமை வாதமோ, அவர் புறக்கணிக்கும் ஒன்றாக இருந்ததில்லை.

புதிய விஞ்ஞான உலகிலும், புதிய அரசியல் கோட் பாட்டுச் சூழலிலும் புரட்சிகரமான சமுதாயத் தத்துவங் களிடையேயும், நம்பிக்கையோடும் நட்போடும், அடிப்படைச் சம்ய நடைமுறைகட்கு ஞாயம் கற்பித்து, உயர்ந்து நிற்பவர்.

புரட்சிகரமான கருத்துக்கள் தமிழர்தம் சமய உலகிற்குப் புறம்பானவையல்ல; அனைத்து அதிகாரமும் அரசன் கையில் இருந்த காலத்தில் "நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடிய அப்பரும், மண்ணிற் பிறப்பதே பாவங்களின் விளைவு என்ற மனப்