பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

507



ஏழில் இருபதைக் கண்டது சிந்தனைக் கருவூலம் தந்த புரட்சி. ஆனால் இருபதில் ஏழைச் செயல்முறைப்படுத்தி சமுதாயச் செயல்முறைப் புரட்சியைக் கண்டது அடிகள் பெருந்தகையின் அற்புத வெளிப்பாடு.

சமயப் புரட்சியில் தலைசிறந்து நின்றது குன்றக்குடி என்பது அன்றைய வரலாறு. சமுதாயப் புரட்சியில் 'குன்றக் குடித் திட்டம்' என்ற ஒன்றை உருவாக்கி, உலகம் வியக்கக் கூடிய வகையில் செயல்முறைப்படுத்திக் காட்டியது அடிகள் பெருந்தகை உருவாக்கிய இன்றைய வரலாறு.

"குன்றைக் குருமணி’ என நாம் நாளும் நினைந்து வணங்கும் தெய்வம், திருவருளும் குருவருளும் இணைந்து நின்ற திருவுரு என நின்ற வழிபடு தெய்வமாம். அடிகள் பெருந்தகை இந்நூலுள் அருளிய பல்வேறு செய்திகளை எடுத்து எழுதினால், விமரிசித்தால் அது ஒர் ஆய்வு நூலாகும். சுருக்கமாக இரண்டொன்றைத் தருதல் வேண்டும்.

"நடலையல்லோம்” என்ற அப்பரடிகள் திருவாக்குக்கு அடிகள் பெருந்தகை அருளிய அனுபவ உரை பக்கம் 22, "மக்களுக்காகக் கோயில் கட்டுவதை விட, மக்களாகவே கோயில் கட்டியிருந்தால்” என்ற எழுத்துக்கு உரிய கருவூலச் சிந்தனையை அறிவால் அறிவதை விட அனுபவத்தால் உணரும் போது கண்ணிர்த் துளி சிந்தாமல் இருக்க முடியாது. அடிகள் பெருந்தகை உருவாக்கிய குன்றக்குடித் திட்டத்தின் சமயச் சமுதாயச் செயற்பாட்டு விரிவாக்கத் திட்டத்தின் ஒருவகைக் கையேடு (GUIDE BOOK) என விளங்குவதே 'அப்பர் விருந்து' என்ற நூல் என்பதைக் குன்றக்குடித் திட்டத்தைச் சென்று கண்டவர் உணர்வர். அத்தகைய செயற்பாட்டுத் திட்டக் கருவூலமாக விளங்கும் 'அப்பர் விருந்து' மக்கள் பயன்படுத்த வேண்டிய அருள் நூல்.

அடிகள் பெருந்தகையின் சமுதாய மறுமலர்ச்சித் திட்டக் கருவூலத்தை நூல் வடிவமாக வெளிக்கொணர்ந்த "திருக்குறள் நெறித் தோன்றல்" "பாநயப் பாமணி" சீனி. திரு