பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ரங்கராஜன்: பொருளீட்டலிலோ, பதவி தேடுவதோ, குடும்பத்தில் ஈடுபடுவதோ ஊழிற்கு முரண்பாடு இல்லை யெனில், வறுமையை நீக்குவது மட்டும் எப்படிப் பொருந்தா திருக்கும். வறுமைக்கு நம்மை ஆளாக்கிய அதே ஊழ், அதை நீக்க நம்மை அழைப்பதாகக் கொள்ளலாமே!

நாளைய நடப்புதான் இன்றைக்கு வித்திடப்படுகிறது. இதைத்தான் எதிர்காலத்தின் விதி முன்னதாகவே எழுதப் படுகிறது என்று கூறுகிறோம். அதாவது, இன்றைய அனுபவம், நேற்றைய சிந்தனைகளின் நிகழ்ச்சிகளின் விளைவுகள். இந்தக் காரண, காரிய பின்னலைத்தான் அறிவியலும் ஆராய்கிறது. சமயமும் ஊழ் என்ற சொற்கொண்டு குறிப்பிடுகிறது.

அடிகளார்:அறிவியல் வளர்ச்சிக்கும் உலகத் தொடர்புக்கும் ஆங்கில வழிக் கல்விதான் ஏற்றது என்று தாங்கள் கருதுகிறீர்களா? அல்லது தாய்மொழிவழி அமைய வேண்டுமா?

ரங்கராஜன்: நிச்சயமாகத் தாய்மொழி வழிதான் ஏற்றது. ஆனாலும், ஆங்கில மொழிவழி ஓர் தற்காலிக உத்தியாக அவசியமாகிறது. ஆங்கிலத்தில் முழுங்குவதை விட்டு, தாய் மொழியில் 'சுவைத்து உண்ண' நாம் தயாரானவுடன், ஆங்கிலம் கையாளுவதை அளவுடன் கொள்ளலாம்; நிறுத்தலாம்.

அடிகளார்: தெற்காசியப் பகுதியை ஆயுதக் கருவிகள் இல்லாத மண்டலமாக்குதல் பற்றித் தங்கள் கருத்து என்ன?

ரங்கராஜன்: தெற்காசியப்பகுதி மட்டுமல்ல, உலக முழுவதிலுமே அணு ஆயுதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நடை முறையில் இதைக் கொணர விவேகம் வேண்டும். நாடு, இனம், ஆக்கிரமிக்கும் ஆசை ஆகியவைகளுக்கப்பால் செயல்படும் திண்மை வேண்டும்.

அடிகளார்: இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் அறிவியல் துறையில் சார்ந்த தொழிற்புரட்சியிலும் வேளாண்மைத் துறையிலும், ஏன், கால்நடை வளர்ப்புத்