பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



441


திருக்குறள் ஆர்வலர்கள் அனைவரும் மகிழக் கூடிய செய்தி! இந்த விருதை நமது தே.கண்ணன் பெற்றிருக்கிறார்! எத்தனை ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு பெற்றிருக்கிறார்-தெரியுமா? திருவாளர் தே.கண்ணன் அவர்கள் தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறையில் பணியாற்றியவர். மாவட்ட வணிக வரி அலுவலர் பதவி வரை அரசுப் பணியில் வளர்ந்து உயர்ந்தவர்.

இனிய செல்வ, வணிக வரித்துறையில் பணி செய்தும் அவர் என்றும் போலத்தான் இருக்கிறார். இனிய செல்வ, புரிகிறதா? இந்த உலகத்தில் கல்லை. தே.கண்ணன் போன்றவர்கள் விசித்திரமானவர்கள்; கல்லை, தே.கண்ணன் அவர்களுடன் நமக்கு உறவு ஏற்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று! அவர் அன்றைய சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் பணி செய்தபோது முதலில் உறவு ஏற்பட்டது! அந்த நாள்முதல் இந்த நாள் வரையில் தலை நாள் காட்டிய பரிவையே காட்டி வருகிறார்! குறியொன்றும் இல்லாத பரிவு-தியாகம்.

அந்தக் காலத்தில் கல்லை, தே.கண்ணன் அவர்களுடைய அழைப்பின் பேரில் சேலம் மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டப் பயணம் ஏற்றுக் கொள்ளப் பெற்றது. அப்பொழுது கிருஷ்ணகிரியில் பலர் வீடுகளின் முகப்பில் திருக்குறள். அலுவலகங்களில் திருக்குறள்! இப்படி இடம் பெற வைத்திருந்தார்! ஒருவரை ஒருவர் சந்தித்தால் எலுமிச்சம்பழம் பெறுவதுதான் மரபு! கல்லை தே.கண்ணன் அவர்கள் ஒரு புது மரபை உருவாக்கினார். நாம் கிருஷ்ணகிரி சென்றவுடன் திருக்குறள் பதித்த அட்டையைக் கொடுத்து வரவேற்றார். இவர் திருக்குறள் பதித்த அட்டைகள் எப்பொழுதும், அவர் கைவசம் இருக்கும்.

இனிய செல்வ, கல்லை. தே.கண்ணன் அவர்கள் நல்ல திருக்குறள் அறிஞர்; 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது ‘தமிழ்க் காப்பு மாநாடு’ ஒன்று குன்றக்குடியில்