பக்கம்:குமண வள்ளல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமணன் அரசு துறத்தல்

85

அழைத்து வைத்துக்கொண்டு மேலே செய்யவேண்டியதைப்பற்றி ஆராய்ந்தான்.

"இதில் சூழ்ச்சி ஒன்றும் இராதே?" என்று கேட்டான் ஓர் அமைச்சன்.

"அவனுக்குச் சூழ்ச்சியே தெரியாது” என்று இளங்குமணன் சொன்னான்.

"அப்படியானல் அவர் எங்கே இருப்பார்?"

"நம் அரண்மனையில் அவனும் இருக்கிறான். அவனக்குச் சோறு போடுவதனால் நமக்குக் குறைந்து விடுமா?" என்று இளங்குமணன் சொன்னான்.

"அவர் நல்லவராக இருந்தாலும் அவரைச் சேர்ந்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவரை உடன் வைத்துக்கொள்வது எப்போதும் தீங்கு பயக்கும்" என்று ஒருவன் கூறினான்.

"பின்னே என்ன செய்யலாம்?" - யாவரும் சேர்ந்து ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன் விளைவாக மற்றோர் ஓலை குமணனுக்குச் சென்றது.

"நாட்டை நம்மிடம் ஒப்பித்துவிடுவதாக எழுதியதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் குமணனுக்கு நாட்டில் எந்த விதமான உரிமையும் இராது. நமக்கு அடிமையாய் வாழ வேண்டும். இல்லையானல் நாட்டைவிட்டு ஓடிவிடவேண்டும்" என்பது ஓலையின் வாசகம். என்ன கொடுமையான உள்ளம்!

குமணன் அந்த ஓலையைக் கண்டு திடுக்கிடவில்லை. இளங்குமணனுடைய போக்கை அவன் தெளிவாக உணர்ந்துகொண்டான். 'நாட்டை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் போடும் சோற்றை உண்டு வாழ்வதைவிடக் காட்டிற்குப் போய்க் கனி கிழங்குகளை உண்டு உயிர் வாழலாம். இறைவனைத் தியானித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/91&oldid=1359246" இலிருந்து மீள்விக்கப்பட்டது