உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

57


"தெரியாதே" என்று குளறினார். 'கற்பழித்ததுமன்றிக் கொலையும் செய்துவிட்டாயா? குமரியை எந்தக் குளத்திலே தள்ளிவிட்டாய்? சொல். உன்னை விட மாட்டேன். பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்" என்று ஆத்திரமாகப் பேசிச் செட்டியாரின் கழுத்தை நெரிக்கலானான் சொக்கன். செட்டியார், சிவனாணையாக எனக்கொன்றும் தெரியாதே. நான் இன்றுதான், அவளைக் கலியாணம் செய்துகொள்வது. ஜாதி பேதத்தைப்பற்றிக் கவலை இல்லை என்று தீர்மானித்தேன்" என்று கூறிக் கதறினார். செட்டியாரை விட்டுவிட்டு, சொக்கன் ஓடினான் வெளியே, உலகிலே எந்தக் கோடியிலிருந்தாலும் குமரியைக் கண்டுபிடித்துவிடுவது என்ற உறுதியுடன்.

***

சொக்கனுடைய சுபாவம் நன்கு தெரியும் குமரிக்கு. ஆகவே, எங்காவது ஓடிவிடவேண்டும், அப்போதுதான் செட்டியார் தப்புவார் என்று எண்ணிய குமரி, இரவு நடுநிசிக்குப் பிறகு, சொக்கனுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். செட்டியார் தன்னைக் கலியாணம் செய்துகொள்வதென்பது முடியாத காரியம் என்பது அவள் எண்ணம். பொழுது விடிவதற்குள், இரண்டோர் கிராமங்களைத் தாண்டிவிட்டாள். பாதையிலே நடந்தால் யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று பயந்து, வயலோரம், ஒற்றை அடிப் பாதை,கொடிவழி இவைகளாகப் பார்த்து நடந்து, மறுதினம் இரவு ஒரு பெரிய கிராமம் போய்ச் சேர்ந்தாள். பசியால் களைத்துக் கீழே வீழ்ந்தாள். அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்ட