உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசையமுது



29, பிரிவாற்றாமை.

இன்பத்துப்பால். அதிகாரம்-116.

இராகம்-சகானா. தாளம்-ஆதி.

எடுப்பு.

செல்லாமை உண்டெனில் எமக்குரையும்-மற்று வல்வரவு வாழ்வார் தமக்குரையும்-பிரிந்து (செல்)

தொடுப்பு.

செல்லாதீர் பிரிந்திடில் நில்லாதென்தேகம் கல்லானதோ மனம் கைவருமோ இன்பம் (செல்)

படுப்பு.

துறைவன் துறந்தமை தூற்றுமே முன்கை இறைஇறவாநின்ற வளையல்.

முடிப்பு.

திரைகடல் போன்றது வரையறுகாதல் தீயோதொடில் சுடும் வீடில் சுடுமேகாமம் (செல்)

சந்தம்.

உறுதிமொழி தந்தும் உணர்வொடு கலந்தும்
உருகும் நிலைகாண மனமிலையோ?
இறுகியணைந்துடல் உயிரென இணைந்தும்
சடுதியில் பிரிவது துயரலவோ?
பிரிவேன் என்றவர் பிரிவதனால்
தரியேன் எனதுயிர் தனிமையிலே
தடுப்பதாலுயிர் நிலைக்குமதனால்

வீடுப்பதேநலம் பிரிக்கும் நினைவதை (செல்)

55