பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கு று ங் ெதா ைக க்

புறப்பட்டான் அவன். அவனைப் பிரிய மனம் வரவில்லை அவளுக்கு.

பொழுது போய்விட்ட நேரம்’ என்றாள்.

“ஆமாம். நாள் முழுதும் வேட்டையாடி அலுத்திருக்கிறாய். உனது நாய்களும் இளேத்தன. இப்போது ஏன் போக வேண் டும்? போகவேண்டாம். அதோ தெரிகிறதே. அந்த மலேக்கு அருகிலே மூங்கில் தெரிகிறதே. அதுதான் எங்கள் ஊர். அங்கே வா. போகலாம். இரவு தங்கிப் பகலில் போகலாம்’ என் ருள்.

கரும்பு தின்னக் கூலியா?

கல்லென் கானத்துக் கடமா ஆட்டி, எல்லும் எல்லின்று ; ஞமலியும் இளேத்தன; செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே ; ஓங்குவரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப் பேதை யானே சுவைத்த கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.

-குட்டுவன்கண்ணன்

76. அறியாத அவலம்

“பொருள் தேடி வருவேன்” என்று சொல்லிப் போனுன் அவன். வருவான் வருவான்’ என்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தாள் அவள். நீண்டகாலம் சென்றது. அவளால் தாங்கு வதற்கு இயலவில்லை. வருந்தினுள். அது கண்டாள் தோழி. சாமர்த்தியம் இருந்தால்தானே! கெட்டிக்காரனாக இருந்தால் விரைவில் பொருள்தேடி வந்திருப்பானே!” என்றாள்.

கேட்டாள் அவள். கொஞ்சம் ரோஷம் வந்தது அவளுக்கு.

“அப்படி ஒன்றுமில்லை. அவர் கெட்டிக்காரர்தான். சாமர்த் தியசாலி. கலங்காத கெஞ்சு கொண்டவர். அதை அறியாமல் வருந்தியகுறை எனதுதான்’ என்றாள் அவள்.