உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கு று ங் .ெ தா ைக க்

--- -- -*

‘போய் வரவா?’ என்று கேட்கிறார். “சரி” என்று சொல்ல மனம் வரவில்லை. என்ன செய்வேன். செல்லும் வழி மிகவும் ஆபத்தானதே. அந்த வழியாகச் செல்கிருரே ! ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று நினைக்கிறேன். எனது நாடிகள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றன. பதில் பேசவே முடிவதில்லை.

“நாளேக்கும் வருவீர்களா ?’ என்று கேட்க மனம் விரும்பு கிறது. வந்தால் மகிழ்ச்சிதானே. ஆனல் அவர் வரும் வழியை கினைக்கிறது மனம். அவ்வழியிலே இருக்கிற துன்பங்களை எண் ணுகிறது. இரவு நேரமாயிற்றே என்ற எண்ணமும் எழுகிறது. நா எழவில்லே. நாளை வருவீரோ என்று கேட்க.

“இப்படியாக, சென்று வாருங்கள் என்றும் சொல்ல முடியா மல் காளை வாருங்கள் என்றும் அழைக்க முடியாமல் அவதிப்படு கிறேன். இந்த மாதிரி எத்தனைநாள் அவதிப்படுவேனடி தோழி?”

சேறிரோ ?’ எனச் செப்பலும் ஆற்றாம் ; “வருவிரோ ? என வினவலும் வினவாம் ; யாங்குச் செய்வாம்கொல் ? - தோழி! - பாம்பின் பையுடை இருந் தலே துமிக்கும் ஏற்றாெடு நடு நாள் என்னர், வங்து, நெடு மென் பணத் தோள் அடைந்திசினேரே.

-கருவூர்ச் சேரமான் சாத்தன்

101. கன்றும் காதலனும்

‘யானைக் குட்டி என்ன செய்யும்? சிறுசாயிருக்கும்போது குறவர் சிறுவருடன் விளையாடும். பின் னே அதே யானைக் கன்று பெரிதாகி என்ன செய்யும் ? குறவர் தம் தினைப்புனத்தை மேயும்; அழிக்கும்.

“அதே போல. இவளது காதலன் முன்பு இவளுடன் விளை யாடினன். இன்பம் தந்தான். பின்பு பிரிந்தான். துன்பம் தருகி ருன். இவள் நலனே - அழகை அழிக்க ஏதுவானன்” என்று சொல்கிருள் தோழி.