உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 167

மெதுவாக உருண்டாள். அப்பால் போய் படுத்தாள் அவள். செவிலி விழித்துக் கொள்கிருளா பார்க்கலாம் என்று.

ஒடிப்போவதற்கு அவள் சதி செய்கிருள் என்பது செவிலிங் குத் தெரியுமா ? தெரியாது. சிறிதும் சந்தேகமின்றித் தூங்கிள்ை அவள்.

எழுந்தாள் அவள். பூனேபோல் மெல்ல அடிமேல் அடி வைத்து நடந்தாள். கொல்லேக் கதவை மெதுவாகத் திறந்தாள். வெளியேறினுள். வேலிக்கருகே காத்திருந்தான் அவன். வேடன் கண்ணி வைத்துக் காத்திருப்பது போல. புருவும் சிக்கியது. இருவரும் ஓடினர்!

பொழுது விடிந்தது. எழுந்தாள் செவிலி. அருகில் பார்த் தாள். அவளேக் காணுேம். கொல்லப்புறம் பார்த்தாள். கதவு திறந்திருந்தது. சந்தேகப் பட்டாள். ‘இருக்கட்டும், பார்க்கலாம்’ என்று நினைத்தாள். பகல் வந்தது. அவளைக் காணுேம்.

எங்கே அவள் ?” எல்லாரும் ஒரே குரலில் வினவினர். சராத்திரி நான் அவளைக் கட்டியணைத்துப் படுத்திருந்தேன்’ ‘உம்’ என்றாள் தாய். கையை எடுத்து அப்பால் போட்டாள். என்னடி என் றேன். வியர்க்கிறது’ என்றாள். கபடமின்றி நம்பினேன் நான்’ சரிதான். ஒடிப் போகிறதுக்கு வழி செய்திருக்கிருள்” என்றாள் தாய்.

கஅது இப்போதுதானே எனக்கு விளங்குகிறது” என்றாள் செவிலி.

பெயர்த்தனென் முயங்க, யான் வியர்த்தனென்

என்றனள் ; இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே - கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி, ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

-மோசிகீரன்