பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கு று க் .ெ த ைக க்

167. நீரும் நினைப்பும்

‘போய் வருகிறேன்” என்றான் அவன். “எங்கே?’ என்றாள் தோழி. “பொருள் தேட” என்றான். ‘காதலியையும் உடன் அழைத்துப் போகலாமே” என்றாள். ‘முடியாது” என்றான். “ஏன்?’ என்றாள். ‘போகிற வழி அப்படிப்பட்டது” என்றான். ஒருவாறு சமாதானம் செய்துவிட்டுப் புறப்பட்டான். நல்ல வெயில். சுட்டுப் பொசுக்குகிறது. பாலே நிலத்தின் வழியே செல் கிருன். நா வரள்கிறது. தண்ணிருக்கு ஏங்குகிருன்.

அங்கே ஒரு சுனே. காட்டு மல்லிகை மலர்கள் உதிர்ந்து மூடப்பட்டிருக்கிறது. அங்கே சென்று பார்க்கிருன். ஒரே நாற்றம். அழுகல் நாற்றம். -

வேட்டை நாய் தோண்டி நீருண்ட சுனே அது. அந்த நீரைப் பருகினன். அப்போது அவள் கினேவு வந்தது அவனுக்கு.

‘நானும் வருவேன் என்று சொன் னுளே! வந்தால் இந்த நீரைத்தானே குடிக்க வேண்டி நேரும்,” என்று எண்ணினன்.

‘கல்ல காலம் அவளே விட்டு வந்தேன்’ என்று சொல்லிக் கொண்டான்.

வேட்டச் செங்காய் கிளைத்துரண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சில் நீர் வளையுடைக் கையள், எம்மொடு உணரீஇயர், வருகதில் அம்ம, தானே : அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே !

-சிறைக்குடி ஆக்தையார்