உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கு று ங் தெ ைகக்

மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை இரும் பனம் பசுங் குடைப் பலவுடன் பொதிந்து பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன நறுந் தண்ணியளே, நல் மா மேனி; புனற் புணே அன்ன சாய் இறைப் பணத் தோள் மணத்தலும் தணத்தலும் இலமே; பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

-சிறைக்குடி ஆந்தையார்

179. காதல் புருவும் பாலைப் புருவும்

பாலே நிலம். ப்ாம்புச் சட்டை உரித்ததுபோல் தோன்று கிறது. பகல். கள்ளியிலே அமர்ந்திருக்கிறது பெண் புரு. ஆண் புரு இரை தேடச் சென்றிருக்கிறது. அதை கினைத்துக் கூவு கிறது பெண் புரு.

‘இத்தகைய காட்சியைக் கண்ட பிறகும் என்னேப் பிரிந்து இருக்கிருரே அவர் அந்த மனேவலிமையை எப்படிப் பெற் ருர்?’ என்று கேட்கிருள் அவள். காதலனைப் பிரிந்த துக்கம் தாங்க முடியாமல். ய்ாங்கு அறிந்தனர்கொல்-தோழி!-பாம்பின் உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, . பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் தயங்க இருந்து, புலம்பக் கூஉம் அருஞ் சுர வைப்பின் கானம் பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?

-மதுரைச் சீத்தலைச் சாத்தன்

180. வங்காவும் மங்கையும்

வங்கா என்று ஒரு பறவை. ஆண் வங்கா இல்லாத சமயத் திலே பெண் வங்காமீது பாய்கிறது வல்லூறு. அது கண்டு