உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 199

தொழில்’ என்றான்.

தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு. முகம் சுண்டியது. அவள் இந்த பதிலே எதிர்பார்க்கவில்லை. காதலிக்கு உயிர் காதலன் ; காதலனுக்கு உயிர் காதலி’ என்று எண்ணிள்ை. ஆனல் அவனே தொழில்’ என்றான். சரி. தொழில் கருதி இவர் பிரிய எண்ணியிருக்கிறார்’ என்று முடிவு செய்தாள். முகம் வாடியது.

கண்டாள் தோழி.

கலங்காதே!” என்றாள்.

“காதலிக்கு உயிர் காதலன். அப்படியால்ை உயிர் தங்கும் உடம்பு எது? காதலிதானே. அதை மறவாதே. உடம்பை விட்டு உயிர் பிரியாது. அவர் உன்னை விட்டுப் பிரிய மாட்டார்” என்றாள். ‘வினேயே ஆடவர்க்கு உயிரே, வாள் நுதல் மனே உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என, நமக்கு உரைத்தோரும் தாமே, அழாஅல் - தோழி! அழுங்குவர் செலவே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

187. கழனி உழவும் காதலன் வரவும்

காட்கள் பல ஆயின. காதலியைப் பிரிந்திருந்தான். பொருள் தேடுவதில் கருத்துடன் இருந்தான். வேண்டிய பொருள்களைத் தேடி முடித்தான். ஊர் திரும்புகிருன். வெகு வேகமாக நடக்கி ருன். அவனுக்கு முன்னே அஞ்சல் வைத்து ஓடுகிறது அவனது நெஞ்சு. காதலியைக் காண்பதற்காக.

வழியிலே என்ன கண்டான் ? குடியானவன் ஒருவனேக் கண்டான். குடியானவன் என்ன செய்கிருன் ? ஒரே ஒர் ஏர். அதை வைத்துக்கொண்டு தனது சிறு நிலத்தை உழுது கொண்டி ருக்கிருன். வெகு விரைவாக உழுகிருன். ஏன் ? மண்ணில்ே உள்ள ஈரம் போய்விடுமோ என்ற அச்சம். ஈரம் உலருமுன் உழுது முடிக்க வேண்டும். உன்ளதோ ஒர் ஏர்.