உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கு று ங் .ெ தா ைக க்

192. அம் மானும் இம் மானும்

“ஐயோ, நமது காதலி வருந்துவாளே! என்று நினைத்து ஒடி வந்து விடுவாரோ? காதலியைக் காணுது எப்படி யிருப்பது? என்று கலங்கி வந்து விடுவாரோ? மேற்கொண்ட காரியத்தைக் கைவிட்டு வந்து விடுவாரோ?” என்று கலங்கினுள் அவள் ; வருந்தினுள்.

ஏன் திரும்பி வரக்கூடாது என்ற எண்ணமா? இல்லை. பின் என்ன ? ‘பொருள் தேடிக்கொண்டு வந்து மணந்து செல் வேன்’ என்று கூறிப் போயிருக்கிருன். அவனது லகூழியம் என்ன ? பொருள் தேடுவது. அப்படிப் பொருள் தேடுங்கால் வரும் இடையூறுகளைப் பொறுத்து வெற்றி பெற்றே திரும்ப வேண்டும்.

இல்லையானல் - போன வேலையை முடிக்காமல் பாதியிலே திரும்பிவிட்டால் - ஊரார் என்ன சொல்வர்? கையாலாகாதவன் என்றல்லவா ஏசுவர் ? இதை எப்படி அவள் பொறுப்பாள் ?

எனவே, தன் காதலனுக்கு இத்தகைய இழிவு ஏதும் வரக் கூடாது என்று கருதுகிருள். தன்மீது உள்ள காதலால் எங்கே யாவது திரும்பி ஓடி வந்து விடுவானே என்று கலங்குகிருள்.

அப்போது தோழி சொல்கிருள் : போன வேலை வெற்றி பெருமல் திரும்ப மாட்டார். கவலைப் படாதே. அத்தகைய கடமை உணர்ச்சியூட்டும் சென்ற வழி.”

“ அப்படியா ? அது எப்படி?’ என்றாள் அவள். “மான் என்ன செய்யும்? மரப் பட்டைகளை உதைத்துத் தள்ளும். மான் குட்டி உண்ணச் செய்யும். அதன் பிறகே தான் உண்ணும். குட்டி பசியோடிருக்கும்போது தான் உண்ணுது. குட்டி வெயிலில் வருந்தாது இருக்க அதற்கு கிழலாக கிற்கும்’

சரிதான். அதனுல் என்ன ?” ‘என்னவா ? காண்பார் உன் காதலர்’ ‘உம். கண்டால்......?’’ ஆகா ! இந்த மானின் மன உறுதிதான் எப்பேர்ப்பட்டது. தனக்குப் பசியாயிருப்பினும் முதலில் தன் குட்டிக்கு உணவு