உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 245

344. க ன் று ம் கா த லும்

மாலை நேரம். பசுக்கள் வீடு நோக்கித் திரும்புகின்றன. பகல் முழுதும் வயிருரப் புல் மேய்ந்து வருகின்றன. வீட்டிலே இருக்கும் கன்றுகளை எண்ணி ஒடி வருகின்றன. கன்றுகளோ ‘அம்மா !” என்று கதறுகின்றன.

இதைப் பார்த்தாள் அவள். கண்ணிர் வடித்தாள். கண்டாள் தோழி.

‘ஏன் அழுகிறாய் ?’ என்று கேட்டாள்.

“அதோ பார் 1’ என்றாள். பசுவையும் கன்றையும் பார்த் தாள் தோழி.

“ஆமாம் அதற்கு என்ன ?”

‘அந்தக் கன்றுபோல் நான் கதறுவேன் என்பது அவருக்குத் தெரியவில்லையே! பசுகூடத் தன் கன்றை கினைத்து ஓடி வரு கிறதே! அவர் வரவில்லையே” என்றாள்.

‘கோ’ என்று கதறிள்ை.

‘சி! அசடே அழாதே 1 அவருக்குத் தெரியாதா என்ன ? சிக்கிரம் வந்துவிடுவார்’

‘தெரிந்தும் அவர் வரவில்லையே!’ என்று கூறிக் கண்ணிர் விட்டாள் அவள்.

பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, புன் தலை மன்றம் நோக்கி, மாலை மடக் கண் குழவி அலம்வந்தன்ன கோயேம் ஆகுதல் அறிந்தும், சேயர் - தோழி! - சேய் நாட்டோரே.

-கருவூர்க் கதப்பிள்ளை

245. கார் அல்ல காரிகையே!

மழை பெய்தது. முல்லே முகிழ்த்தது. ‘கார் வந்தது’ என்றாள் அவள்.