உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 303

பொய் சொல்வி விட்டான். அதனல் பாணர் எல்லாருமே பொய்யர் போல் தோற்றமளிக்கின்றனர் எனக்கு’ என்றாள். குருகு கொளக் குளித்த கெண்டை அயலது உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர், நீ அகன்றி.சினுேர்க்கே.

-ஓரம்போகியார்

321. வம்புக் கோட்டான்

பசும்பூட் பாண்டியனுக்கும் கொங்கருக்கும் போர் நடந்தது. கடுமையான போர். ஆரவாரம் மிக்க போர். இறுதியில் பாண் டியன் வென்றான்.

அந்தப் போர்க்களத்திலே ஆரவாரம் எப்படியிருந்ததோ அப் படியாக ஊரிலே பெருத்த ஆரவார்ம் ஏற்பட்டு விட்டது. ஏன் தெரியுமா ? அவளுக்கும் அவனுக்கும் காதல்! அவ்வளவுதான். இதை வெகு ஆத்திரத்துடன் சொல்கிருள் அவள்.

“அவர் வந்து இன்பமாக இருந்த நாட்கள் சிலவே. ஆனல் இந்தக் கோட்டான்களின் வம்போ சொல்ல முடியாது’ என்றாள்.

மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாள் தவச் சிலவே, அலரே, கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன் களிருெடு பட்ட ஞான்றை, ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.

-பரணர்

322. இ ன் பத் து க் கு இ ட ம்

“எங்கள் ஊருக்கு அருகே ஒரு பொய்கை யிருக்கிறது. பொய்கைக்கு அருகே கான் ஆறு உள்ளது. அதன் அருகே ஒரு