பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 31

4. காதல் 1 இன்றேல் நோதல் 1

“அப்படியானல் என்ன சொல்கிறாய்?”

“என்ன சொல்ல வேண்டும் ?’’

“எனது எண்ணத்தைச் சொல்ல வேண்டும்’

  • சொல்லி ?’’

‘அவளை அதற்கு இணங்கச் செய்ய வேண்டும்’

‘அதுதான் முடியாது”

“முடியாதா?’’

“ஊஹாம். அவளுக்கு உன்மேல் காதல் பிறக்கவில்லையே!”

‘பிறக்க வில்லேயா ?”

‘கான் அவளுக்காகப் படும்பாடு கண்டுமா காதல் பிறக்க வில்லை?”

இல்லை’

“அமுதம் போன்ற இன்மொழியாள். புன்முறுவலாள். என்னைப் புறக்கணித்து விட்டாள். ஆனல் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா ?”

என்ன செய்யப் போகிறாய் ?”

“மடல் ஏறப் போகிறேன்’

‘ஊரெல்லாம் உன்னைப் பற்றிப் பேசும்’

“நான்தான் வெட்கத்தை விட்டுத்தானே மடல் ஏறப் போகிறேன்’ அமிழ்து பொதி செங்கா அஞ்ச வந்த ஆர்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி

அரிவையை, பெறுகதில் அம்ம ! யானே பெற்றாங்கு அறிகதில் அம்ம! இவ்வூரே மறுகில் நல்லோள் கணவன் இவன் எனப் பல்லோர் கூற, யாம் நானுகம் சிறிதே.

-தொல் கபிலர்