பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 335

365. துறைவன் தந்த துன்பம்

“அடியே அம்மாதான் முருகனுக்குப் பூசை செய்தாள். உனது துன்பத்தின் காரணத்தைக் கண்டு கொண்டாள். இனி மேல் விரைவிலே கலியாணம் நடக்கும். அப்படியிருக்க ஏன் இன்னமும் வருத்துகிறாய்?’ என்றாள் தோழி.

‘அம்மா என்ன கண்டாள் ?”

“என்ன கண்டாளா? மேல்காற்றுக் கொண்டுவந்து மணலைக் கொட்டுகிறது; பனைமரத்தின் வேரை முடுகிறது. அத்தகைய துறைவனே உனக்குத் துன்பம் தந்தவன் என்று கண்டு கொண்டாள்’’

கண்டு கொண்டாளா ?”

“ஆம்!”

அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு உறுக என்ற நாளே குறுகி, ஈங்கு ஆகின்றே - தோழி ! - கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனே குறிய ஆகும் துறைவனைப் பெரிய கூறி, யாய் அறிந்தனளே.

-உலோச்சன்

366. தேர் ஏறி வந்தான் !

நெய்தல் கிலம். இரவு நேரம். நள்ளிரவு. யானையின் காதுபோல இலைகள் படர்ந்திருக்கின்றன. கழியிலே. நீரைத் துழா வித் துழாவி இரை தேடுகிறது கடல் காகம். அமைதியான அந்த நேரத்திலே ஒரு தேர் வருகிறது. யார் அவன் ஒர் இளைஞன். தன் காதலியைத் தேடி வருகிருன். அவளும் வருகிருள். ஆனந்தம். தேரில் வந்தவன் திரும்பிப் போகிருன். இப்படிச்