உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 367

நெடும் பல்லியத்தனர்

பல்லியம் என்றால் பல்வேறு இசைக் கருவிகள் என்று பொருள். அதாவது ஆர்க்செஸ்ட்ரா என்று சொல் கிறார்களே அந்தமாதிரி. இவ்விதம் பல்வேறு இசைக் கருவிகளையும் முழக்கியோ, முழக்குவித்தோ புகழ் பெற்றவர் இவர் என்று தெரிகிறது.

நெய்தல் கார்க்கியர்

கார்க்கியர் கோத்திரத்திலே பிறந்தவர். நெய்தல் திணையை-அதாவது இரங்கலே-மிகத் திறமையுடன் பாடியிருக்கிறார். எனவே, நெய்தல் கார்க்கியர் என அழைக்கப் பெற்றார்,

பதடி வைகலார்

‘பதடி வைகல்’ என்று குறிப்பிட்டார் இவர். எதை ? காதலடியுடன் இன்பமாக வாழ்ந்திடாத நாளே. எனவே, இவருக்குப் பதடி வைகலார் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது.

பருஉ மோவாய்ப் பதுமர்

பதுமர் என்பது இவரது பெயர். ஆல்ை இவரது முக வாய்க் கட்டை மிகப் பருமனக இருந்ததாம். எனவே, பரு மோவாய்ப்பதுமர் என்று அழைத்தார்கள் போலும்!

பாரதம் பாடிய பெருந்தேவனர்

இவர் தொண்டை நாட்டினர். பாரத கதையைத் தமிழ் மொழியிலே முதன் முதல் தந்தவர்.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

சேர அரசர் பரம்பரையினர். பாலேத்திணை-அதாவது பிரிவு-பற்றிப் பாடுவதில் சிறப்புப் பெற்றார்.