உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 63

‘அந்த ஒடைக் கரையிலே கின்று மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தது காரை’

‘காரை எங்கேயாவது வாய் திறந்து சாட்சி சொல்லுமா ?” வேறு எவருமில்லையே! நான் என்ன செய்வேன்’ இவ்வாறு வருந்தினுள் அவள். யாரும் இல்லை ; தானே கள்வன் ! தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ ! தினைத்தாள் அன்ன சிறு பசுங் கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் f குருகும் உண்டு ! தான் மணந்த ஞான்றே. பிலர் —lli)is

38. கு ர ங் கு .ெ சா ல் லு ம் குறி!

வேங்கை மரம் மலே நாட்டிலே, கன்றாகப் பூத்திருக்கிறது. அந்த மரத்தின் கிளேயிலே மயில்கள் அமர்ந்திருக்கின்றன.

அக்காட்சியைக் காண்கிறார் கவி. இயற்கையின் அழகிலே ஈடுபடுகிறார். என்ன தோன்றுகிறது?

பெண்கள் அந்த வேங்கை மரத்தின் மீதில் ஏறி நின்று மலர் கொய்வது போல் தோன்றுகிறது.

இத்தகைய மலை நாட்டுச் செல்வன் ஒருவன்; இளைஞன். ஒரு பெண் மீது காதல் கொள்கிருன். அவளும் அவனைக் காதலிக்கிருள்.

இன்பமாக இருக்கிறார்கள். களவு இன்பம். இந்தக் களவு இன்பம் எவ்வளவு நாள்? நீண்ட நாள் நடைபெறுமா? இயலாது அல்லவா? எவ்வளவோ தடைகள்! இந்த இடையூறுகளினலே பல நாள் இவ்விளம் காதலர் சந்திக்க இயலாமற் போயினர்.

அந்த இளம் பெண் மனம் புழுங்கிள்ை. உணவு செல்ல வில்லை. உறக்கம் கொள்ளவில்லை. அவளது நடையுடைகளில் மாறுதல் கண்டாள் தாய்.

‘இவள் ஏன் இப்படி இருக்கிருள்?’ என்று கேட்டாள். “எப்படி யிருக்கிருள்?’ என்றாள் செவிலி.