பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கு று ங் .ெ த ைக க்

சென்றன. அதுவும் கூடாது போயிற்று. அவளுக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று, வாடினள். ஊண் செல்லவில்லை. உற் சாகமில்லே.

அவளது வேறுபாடு கண்டாள் தாய். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லே. குறி சொல்பவளேக் கூட்டிக் கொண்டுவரச் செய்தாள், முறத்திலே நெல்லைக் கொண்டுவரச் சொன்னாள். குறிகாரி குறி பார்க்கத் தொடங்கிள்ை. பாடுகிருள் குறி சொல்பவள்.

அப்போது தோழி சொல்கிருள்:

‘ஏ! குறத்தி பாடு! பாடு! இன்னும் பாடு! நன் முகப் பாடு! மேலும் பாடு! அவளுக்கு வேண்டியவருடைய மலேயைப் பாடு. அவளது நோய் நீங்கும்’ என்றாள்.

அகவல் மகளே! அகவல் மகளே! மனவுக் கோப்பு அன்ன நல் நெடுங் கூந்தல் அகவல் மகளே! பாடுக பாட்டே! இன்னும் பாடுக பாட்டே அவர் நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.

-ஒளவையார்

40. கொல்லிப் பாவையும் குறப் பாவையும்

வள்ளல்கள் எழுவர். அவருள் ஒருவன் ஒரி. வல்வில் ஒரி என்றும் இவனுக்குப் பெயர் உண்டு. வலி மிக்க வில்லை உடையவன் ஒரி. அதாவது பல பொருள்களே ஒரே கணையில் தாக்கும் திறம் மிக்கவன். கொல்லிமலே இ. வ னு க் கு ச் சொந்தமானது.

கொல்லி மலையிலே யானைகள் அதிகம், பொல்லாத யானை கள். அந்த யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பத் திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். பஞ்சம் வந்த காலத் தில் அந்த யானைத் தந்தங்களே விற்றுத் தங்கள் பஞ்சத்தைப் போக்கிக் கொள்வார்கள்.