பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கு று ங் தொ ைக க்

கூறினால் நாமும் அதை ஏற்றுக் கொள்வோம். அவர் மணந்த நாளில் எத்தகைய அன்பு கொண்டிருந்தேனே அப்படியே தான் இப்பொழுதும் இருக்கிறேன். வரச் சொல’ என்றாள் அவள். புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும் நாடன் தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் வங்தன்று . வாழி, தோழி! - நாமும் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு, ‘தான் மணந்தனையம் என விடுகம் துதே.

-கபிலர்

44. தாயும் பேயும்

அண்ணலும் நோக்கினன். அவளும் நோக்கினள். இரு வரும் காதல் கொண்டனர். கருத்து ஒன் ருயினர். உடலும் ஒன் ருயினர். இன்பம் அநுபவித்தனர். பிறகு அவன் பிரித்தான்.

“மறந்து விடாதே’ என்றாள்.

‘மறவேன்’ என்றான்.

மெய்யாகவா ?’ என்றாள்.

‘வருவேன்’

  • எப்போது ?’’
  • விரைவில்’’

“வருவாய்; வரைவாய்”

‘கண்ணே கலங்காதே !’

இது நிகழ்ந்து நாட்கள் பல சென்றன. வருவான் வருவான் என்று எதிர்பார்த்தாள்.வரவில்லே. ஏங்கினுள். தூக்கம் வரவில்லை. முகம் ஒளியிழந்தது. உணவு செல்லவில்லை. உள்ளத்திலே மகிழ்ச்சியில்லை. துள்ளும் நடையில்லை. துடுக்கான பேச்சில்லே!

இந்த மாறுதல்களைக் கண்டாள் தாய்.

‘இவள் ஏன் இப்படி இருக்கிருள் ?’ என்று கேட்டாள்.

‘என்னவோ தெரிய வில்லேயே !’ என்றாள் செவிலி,

“என்ன என்று விசாரித்தாயா?’’