உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 79

‘சரி, இன்று எப்படியாவது அவளைச் சந்தித்தே தீர்வது” ன்ன்று எண்ணிக் கொண்டு வருகிருன்.

அவளுடைய வீட்டிலே எல்லாரும் அயர்ந்து தூங்குகிறார்கள். ஆனல் அவள் மாத்திரம் தூங்கவில்லை. வீட்டுக்குள்ளே இருக் கும் அவள் வெளியே வரவேண்டுமே! அவன் வந்திருக்கிருன் என்று தெரிந்தால் வெளியே வருவாள். அதைத் தெரிவிப்பது எப்படி? மரக்கிளேயைப் பிடித்து உலுக்கி சப்தம் செய்கிருன்.

‘இரவு நேரத்திலே நீ வந்தால் இந்தமாதிரி மரக்கிளேயை உலுக்கு. நான் எழுந்து வருகிறேன்” என்று சொல்லி வைத்தி ருந்தாள் அவள். அதன்படி செய்தான் அவன்.

ஆனல் அவள் வரவில்லை. எழுந்து வரவில்லை. காரணம் என்ன? சிறிது நேரம் முன்பு அந்தமாதிரி ஒரு சப்தம் கேட்டது. அவள் எழுந்து வந்தாள். ஆசையோடு வந்தாள். ஆனால் அவன் இல்லே. பின் சப்தம் எப்படி ஏற்பட்டது? பறவை ஒன்றை மற் ருென்று விரட்டியதால் இலைக்குள்ளே புகுந்து ஓடியது. சப்தம் கேட்டது. அவ்வளவுதான். அவள் ஏமாந்தாள். மறுபடியும் அந்த மாதிரி சப்தம் கேட்கவே அவள் என்ன நினைத்தாள்? சரிதான். பறவைகள்தான் மீண்டும் இந்த மாதிரி செய்கின்றன’ என்று கினைத்தாள். எழுந்து வரவில்லை.

அவனே காத்திருந்து பார்த்தான். நீண்ட நேரமாயிற்று. அவள் வரவில்லே. மனம் உடைந்தான்.

சரிதான். இனிமேல் அவள் எங்கே வரப்போகிருள்? நல்ல வள்தான். நான் வந்தபோதெல்லாம் இன்பமாகப் பேசிள்ை. ஆனல் காண்பதற்கே அருமையாயிருக்கிறதே! கிட்டாத இடத் தில் நாட்டம் வைக்கலாமா? வறியவனுக்கு ஏது காதல்!” என்று புலம்புகிருன்.

இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு, அரிது வேட்டனையால் - நெஞ்சே! - காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியாதோயே.

-பரணர்