உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பின் எதிலே ஈடுபடுவார்கள் ? மனித உள்ளத்திலே தான் ஈடுபடுவார்கள். மனித உள்ளத்தின் உணர்ச்சிகளே மற்றாேர் மனித உள்ளத்தை அள்ளும் ஈர்க்கும்; பிடிக்கும் , வசீகரிக்கும்.

சங்க இலக்கியங்களிலே மனித உணர்ச்சிக்குப் பஞ்சமே இல்லை. ஏராளமாக இருக்கிறது. அதை எடுத்துக் காட்ட வேண்டும். மனித வாழ்க்கைக்குத் திரை போடக் கூடாது.

அப்போதுதான் மக்கள் ரசிப்பார்கள். விரும்புவார்கள். ஆர்வமுடன் படிப்பார்கள்.

இலக்கியம் என்பது சிலருக்கா ? அல்ல. பண்டிதர் உடை மையா? அல்ல. பின் எவருக்கு? மக்களுக்கு; பெரும்பாலான மக்களுக்கு.

இந்த எண்ணம் நமது கருத்திலே வேரூன்றுதல் வேண்டும்.

இந்த எண்ணம் எனது உள்ளத்திலே வேரூன்றச் செய்தவர் யார் ? தமிழ்ப் பெரியார் திரு. வி. க.

அப்பெரியார் அறிவுக் கடலிலே ஊறியவர்; திளைத்தவர். தகைய ஒருவரிடமிருந்து என்ன பிறக்கும் ? அறிவு ; அறிவு.

ஆரஞ்சுப் பழத்தைச் சாறு பிழிந்து, அதிலே சிறிது தேனுங் கலந்து கொடுத்தால் எப்படி இருக்கும் ? அப்படிச் சொல்வார் அவர். எதை பழந் தமிழ் இலக்கியக் கருத்துக்களே,

அப் பெரியார் எனக்குக் காட்டிய வழியையே நான் பின் பற்றியிருக்கிறேன். அவ்வழியிலேயே குறுந்தொகைப் பாடல் களுக்கு விளக்கம் எழுதியிருக்கிறேன்.

நான் எழுதும்போது என் முன்னே இலக்கணம் தோன்றுவ தில்லை அணி தோன்றுவதில்லை; சொல் நயம் தோன்றுவதில்லை ; கற்பனை தோன்றுவதில்லை. பின் என்ன? மனித குமாரன் தோன் றுகிருன் : பழந் தமிழன் தோன்றுகிருன்; இன்றைய தமிழன் தோன்றுகிருன்.