பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சிகள் 83

“எனது வனப்பு, பெண்மை எல்லாம் புத்தம் புதியனவா யிருந்தபோது அவர் அநுபவித்தார். இன்னும் கலியாணம் செய்து கொள்ள வரவில்லை. என்ன செய்வேன்?”

‘இன்னும் சிலநாள் பொறுத்திருந்து பார்ப்போமே !’

“என்னடி பொறுமை வேண்டியிருக்கிறது. தினைப்புனத் திலே தினை விதைத்திருக்கிருன் குறவன். பொன்போல் கதிர் வாங்குகிறது. கிளி வந்து அக் கதிரை உண்டு செல்கிறது. கூழை யாகி நிற்கிறது தினே. அப்போது ஒரு மழை பெய்கிறது. உடனே சிறிது தளிர்க்கிறது. அந்த மாதிரி அல்லவா இருக் கிறேன்” என்று புலம்பினுள் அவள்.

புனவன் துடவைப் பொன்போல் சிறுதினே கிளி குறைத்து உண்ட கூழை இருவி பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு, என் உரம் செத்தும் உளெனே-தோழி 1-என் கலம் புதிது உண்ட புலம்பினனே. w

-உறையூர் முதுகண்ணன் சாத்தன்

54. வேங்கையும் மங்கையும்

மலைச் சாரலில் விழுந்து ஓடுகிறது அருவி. அது எப்படி யிருக்கிறது? பாம்பு நெளிந்து நெளிந்து ஓடிப்பாறைக்குள் புகுவது போல் இருக்கிறது.

அந்த அருவியின் அருகே வேங்கை மரங்கள் செழித்து ஓங்கி வளர்ந்திருக்கின்றன. அவற்றின் கிளேகளைத் தாக்கிப் பூவை யெல்லாம் உதிர்த்து வருகிறது அருவி ; கற்களை உருட்டி வரு கிறது; ஒலித்து ஒடுகிறது.

அதையே பார்த்துக் கொண்டிருக்கிருள் அவள். கண்களி லிருந்து நீர் சொரிகிருள்.

‘ஏன் ?’ என்று கேட்டாள் தோழி.

‘ஒன்றுமில்லை ; இந்த மலேயையும் அருவி யையும் பார்த்தேன்’