பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தமான் தீவுகள் - அப்பலேச்சியன் மலைகள்

13


அதைக்கொண்டு பெரிய சக்கரங்களைச் சுழலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்ய லாம். இப்படிப் பல நோக்கங்களுடன் இக் காலத்தில் அணைகளைக் கட்டுகிறார்கள். அணையைக் கட்டவேண்டிய இடத்தின் அமைப்பு, ஆற்றின்வேகம், அருகில் கிடைக் கும் மூலப்பொருள்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்றவாறு, அணையை அமைப்பார்கள். அணைகளை முக்கியமாக மண்ணாலும், கல்லாலும், சிமென்டுக் கான்கிரீட்டினாலும் இக் காலத் தில் கட்டுகிறார்கள். மண்ணால் கட்டப்பட்ட. அணைக்குப் பவானி சாகரம் ஓர் எடுத்துக் காட்டு. இங்கு நீர் வெளியே விடப்படும் பகுதி மட்டுமே கான்கிரீட்டால் ஆனது. சாத்தனூர் அணை கல்லால் கட்டியது. மேட்டூர் அணை கான்கிரீட்டையும், எஃகை யுங் கொண்டு கட்டப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் நூற்றுக் கணக்கான அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் உயரமானது சுவிட் ஸர்லாந்தில் உள்ள மௌவாய்சின் அணை ஆகும். அதன் உயரம் 777 அடி. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கொல ராடோ நதியில் உள்ள போல்டர், ஹூவர் அணைகள், எகிப்தில் நைல் நதி யின் மீதுள்ள அஸ்வான் அணை, தியாவில் சட்லெஜ் நதியின்மேல் உள்ள பக்ரா நங்கல் அணை ஆகியவை மிகப் பெரிய அணைகள் ஆகும். அந்தமான் தீவுகள்: அந்த மான் தீவுகள் இந்தியாவிற்குச் சொந்தமானவை. வங்காள விரிகுடாவில் உள்ளன. சென்னை யிலிருந்து 740 மைல் தொலை வில் இருக்கின்றன. தெற்கு வடக்காக இவற்றில் மொத்தம் 204 தீவுகள் உண்டு. இவற்றின் நீளம் 219 மைல். பெரிய தீவுகள், சிறிய தீவு கள் என இந்தத் தீவுக் கூட்டம் இரண்டு பகுதிகளாக உள்ளது. இங்கு மலைகளும், காடுகளுமே அதிகம். தேக்கும், தென்னையும், வேறு பல மரங்களும் செழிப் பாக வளர்கின்றன. பெரிய அந்தமான் விலங்குகள் ஏதும் இந்தக் காடுகளில் இல்லை. எலி, வௌவால் ஆகியவை அதிகமாக உள்ளன. இந்தத் தீவில் ஆதியிலிருந்து வாழ்ந்துவரும் மக்கள் மிகப் பழங்கால இனத்தைச் சேர்ந்தவர்கள்; குள்ளர்கள். இவர்கள் இனம் குறைந்து கொண்டே வருகின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்போது குற்றவாளிகளை நாடு கடத்திக் குடியேற்றும் இடமாக அந்தமான் தீவுகள் இருந்துவந் தன. இன்று இந்தியர் பலர் இங்குச் சென்று விவசாயம், மரம் வெட்டுதல் முதலிய தொழில்களைச் செய்து வருகிறார்கள். போர்ட் பிளேர், கார்ன்வாலிஸ், எல் பின்ஸ்டன் என்பவை முக்கிய துறைமுகங் கள். இந்தத் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேர் ஆகும். இங்குள்ள மிக உயரமான இடத்தின் பெயர் சாடில். அதன் உயரம் 2,400 அடி. 13 அப்பலேச்சியன் மலைகள் : இவை வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நீண்ட மலைத்தொடராக அமைந்திருக்கின்றன. இந்தத் தொடரின் நீளம் 1,300 மைலுக்குமேல் உள்ளது. இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம் மலைகள் இருந்து வருகின்றன என்று கருதுகிறார்கள். இமயமலை தோன்றுவதற்கு முன்பே இவை தோன்றினவாம். தீவுகள் பல மலைகளுக்கு இடையிடையே பள்ளத்தாக்குகள் உள்ளன. இவை மிகவும் செழிப்பானவை. எப்பொழுதும் பசுமையாக உள்ள காடுகள் இங்கு அதிகம். மலைகளுக் கிடையே டென்னெசி என்னும் ஆறு பாய்கிறது. கரடி, நரி, மான், வான்கோழி ஆகிய உயி ரினங்கள் இந்த மலைகளில் வாழ் கின்றன. மலைகள் அதிக உயர மாக இல்லை. மிச்செல் என்ற பெயருடைய சிகரத்தின் உய பிளேர் ரமே6, 684அடிதான். ஆதலால் இங்குப் பனி உறைவதில்லை. 'போர்ட் 3 இம் மலைகளில் கரி, துத்தநாகம், லியம் முதலியவை கின்றன. இரும்பு, பெட்ரோ கிடைக்