பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அமெரிக்கா

பிறகு வேறு பல ஐரோப்பிய நாட்டின ரும் சென்று குடியேறிஞர்கள். முதன் முதல் குடியேறிய ஆங்கிலேயர் 'ஐக்கிய நாடுகள்' என்ற பெயரில் பதின்மூன்று இராச்சியங்களை இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அமைத்துக்கொண்டனர். ஆனால் நாளடைவில் பல ஆயிரம் மைல் களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்துக்குக் கட்டுப்பட்டு நடக்க அம்மக்கள் விரும்ப வில்லை. அதனால் அவர்களுக்கும், ஆங்கி லேயருக்கும் போர் நடந்தது. அமெரிக்கர் வெற்றி பெற்றனர். ஐக்கிய நாடுகள் ஒரு தனிச் சுதந்தர நாடாயிற்று. அடுத்துப் பல குடியேற்றங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உறுப்பு இராச்சியங்களாக இணைந்தன. சுதந்தர அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்க்டன் என்பவர். அமெரிக்காவின் விவசாய வளர்ச்சிக் கும், தொழில் வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருந்த நீக்ரோக்களை அமெரிக் கர்கள் அடிமைகளாக நடத்தினர். இன் றைக்கு நூறாண்டுகளுக்கு முன்பு நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லின்கன் பல கடும் எதிர்ப்புகளை வென்று நீக்ரோக் களுக்கு விடுதலை வழங்கினார். இந்த நூற் முண்டில் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் உட்ரோ வில்சன். ரூஸ்வெல்ட், கென்னடி ஆகியோர் பேரும் புகழும் பெற்றவர்கள். அமெரிக்கா: இதற்குப் புது உலகம் என்று பெயர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்புவரை இக்கண்டத்தைப் பற்றி Autruler மெக்கிப்த மத்தி அமெரிக்கா year (தென் அமெரிக்கர ஐரோப்பியருக்கு ஒன்றும் தெரியாது. இதைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான மை தொலைவு கடல் சூழ்ந்து நிற்பதுதான் இதற்குக் காரணம். கடலில் மேற்குத் திசையில் சென்று இந்தியாவுக்கு வழி காண முயன்ற கொலம்பஸ் அமெரிக்காவின் கரையைக் கண்டபோது தாம் இந்தியா வைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத் தார்.அமெரிக்கஸ் வெஸ்ப்பூசியஸ் என்ற இத்தாலிய நாடாய்வாளர் இது ஒரு புது உலகம் . என்று கண்டார். இவரைப் பாராட்டும். வகையில் இக்கண்டம் அமெரிக்கா என்றே வழங்கி வருகின்றது. அமெரிக்காக் கண்டம் இரண்டு பெரிய நிலப்பரப்புகளைக் கொண்டது. ஒன்று வட அமெரிக்கா. மற்றேன்று தென் அமெ ரிக்கா. கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு கள், மெக்சிக்கோ ஆகிய மூன்று பெரிய நாடுகள் வட அமெரிக்காவில் உள்ளன. மெக்சிக்கோவிற்குத் தெற்கே ஏழு சிறிய நாடுகள் உள்ளன. இவை இருக்கும் பகுதியை மத்திய அமெரிக்கா என்றும் சொல்வதுண்டு. என்றாலும் இது வட அமெரிக்காவின் ஒரு பகுதிதான். தென் அமெரிக்காவில் 13 நாடுகள் உள்ளன. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளைப் பானமா என்னும் ஒரு சிறிய பூசந்தி இணைக்கிறது. இரண்டு பகுதிகளிலும் பெரிய பெரிய மலைகளும், ஆறுகளும் உண்டு. சில இடங்களில் காடுகள் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளன. உலகத்தில் மிகச் செழிப்பான கண்டம் அமெரிக்காதான். நிலக்கரியும், இரும்பும். பெட்ரோலியம் எண்ணெயும், வேறு தாதுப் பொருள்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஐரோப்பியர் சென்று குடியேறுவதற்கு முன்பே இங்குப் பழங்குடி மக்கள் பலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களை அமெரிக்க இந்தியர்கள் என்று சொல்வார்கள். கானடாவிலும், அமெரிக்க ஐக்கிய நாடு களிலும் பெரும்பாலார் பேசும் மொழி ஆங்கிலம். கானடாவில் குவிபெக் பகுதி யில் பிரெஞ்சு மொழி பேசுவோர் மிக அதிகம். மற்ற நாடுகளில் அதிகமாகப் போர்ச்சுகேசிய மொழியும், ஸ்பானிய மொழியும், பிரெஞ்சு மொழியும் வழங்கு கின்றன. பார்க்க: தென் அமெரிக்கா; மத்திய அமெரிக்கா: வட அமெரிக்கா; கானடா: மெக்சிக்கோ.