பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ஆக்சிஜன் — ஆகாயக் கப்பல்

மூச்சுக் கோளாற்றுக்கு ஆக்சிஜன் சிகிச்சை திரவமாக மாறும். பூமியைச் சூழ்ந்துள்ள காற்றில் ஐந்தில் ஒரு பங்கு இவ்வாயு கலந்திருக்கிறது. காற்றினின்றும் இதைத் தனியாகப் பிரித்தெடுக்கலாம். இது கலந் துள்ள வேறு பொருள்களினின்றும் இதைப் பிரித்தெடுக்கலாம். காற்றில் கலந்துள்ள ஆக்சிஜனின் அளவு என்றும் குறைவதே இல்லை. இதற்குத் தாவரங்கள் முதற் காரணம். அவை தத் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்காகக் கார்பன் டையாக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இயற்கையில் இந்த நிகழ்ச்சி இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருக்கும். இரும்பு, செம்பு, கந்தகம், கார்பன் முதலிய தனிமங்களுடன் ஆக்சிஜன் சேரும் போது வேறு புதிய கூட்டுப் பொருள்கள் உண்டாகின்றன. இவை ஆக்சைடுகள் எனப்படுகின்றன. இவ்வாயு ஹைடிரஜ னுடன் கலக்கும்போது தண்ணீர் உண் டாகின்றது. காற்றிலிருந்தும், கூட்டுப் பொருள்களிலிருந்தும் ஆக்சிஜனைப் பிரித்து இரும்புக் குழாய்களில் அடைத்து வைப் பார்கள். எந்தப் பொருளும் தீப்பற்றி எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. இவ்வாயு கலந்தால் வெப்ப நிலையும் உயரும். இரும்பைத் துண் டிப்பதற்கும், இரும்புத் துண்டுகளைப் பற்ற வைப்பதற்கும் ஆக்சிஜன் கலந்த தீக் கொழுந்து பயன்படுகின்றது. மருத்துவத்தில் ஆக்சிஜன் மிகவும் பயன் படுகின்றது. மூச்சுக் கோளாற்றினால் துன் புறும் நோயாளிகளுக்கு மூக்கின் வழியாக ஆக்சிஜன் உள்ளே செலுத்தப்படுவ துண்டு. எவரஸ்ட் போன்ற உயர்ந்த மலைச் சிகரங்களில் ஏறுபவர்கள் தம்முடன் ஆக்சி ஜன் அடங்கிய கலங்களை எடுத்துச் செல் வார்கள். செயற்கைக் கோள்களை வானத் தில் செலுத்தும் ராக்கெட்டுகளுக்குத் திரவ ஆக்சிஜன் எரிபொருளாகப் பயன்படுகிறது. சில வகை வெடி மருந்துகள் செய்யவும் இது பயன்படுகிறது. ஆகாயக் கப்பல் : தக்கை தண்ணீரில் மிதக்கிறது. ஏன் தெரியுமா? தண்ணீரை விடத் தக்கை இலேசாக இருப்பதால் அது மிதக்கிறது. தண்ணீரைவிட இலேசான பொருள் தண்ணீரில் மிதப்பதைப் போலவே, காற்றைவிட இலேசான பொருள் காற்றில் மிதக்கும். ஹைடிரஜன், ஹீலியம் போன்ற வாயுக் கள் காற்றைவிட இலேசானவை. இந்த வாயுக்களை நிரப்பிய பலூன்கள் காற்றில் மிதக்கும். நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெரிய பலூன்கள் செய்து, அவற்றில் ஹைடிரஜன் வாயுவை நிரப்பிப் பறக்க விட்டிருக்கிறார்கள். மனிதர்களும் இந்த பலூன்களில் ஏறிப் பறந்து சென்றதுண்டு. ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்பு, ஆகாயக் கப்பல்கள் தாம் கட்டப்பட்டன. பிரான்ஸில் 1852-ல் ஹென்ரி கிபார்டு என்பவர் சுருட்டு வடி வத்தில் ஒரு பெரிய பலூன் செய்து, அதற்கு எஞ்சின் ஒன்றை இணைத்து ஆகா யத்தில் தாம் விரும்பிய திசையில் ஓட்டிக் காண்பித்தார். இவரைப் பின்பற்றிப் பல நாட்டினரும் இத்தகைய ஆகாயக் கப்பல்களைக் கட்டுவதற்கு முயன்றனர். ஜெர்மானியர் கிராப் ஜெப்பலின் என்ற மிகப் பெரிய ஆகாயக் கப்பல் ஒன்றைக் கட்டினர். அதன் நீளம் 800 அடி; குறுக்களவு 100 அடி. அதற்கு ஐந்து எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஐம்பது பேரை ஏற்றிக்கொண்டு மணிக்கு 70 மைல் வேகத்தில் பறந்தது. அது ஆகாயக் கப்பல் பள,பா (/