பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாது - ஆசாம்

37


ஆசாது, அபுல் கலாம் (1888-1958): இவர் இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்.1888-ல் மக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் தம் ஒன்பதாம் வயதி லேயே தம் பெற்றோருடன் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அரபு மொழியைப் பயின்றார். தம் பதினான்காம் வயதில் பள்ளி ஆசிரியரானார். காந்தியடிகளின் தலைமையில் அபுல்கலா மும் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட் டார். அப்பொழுது இவர் தம் பெயரோடு 'ஆசாது’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டார். 'ஆசாது' என்றால் சுதந்தரம் உள்ளவன் என்று பொருள். இவர் 'அல்ஹிலால்' என்னும் உருது பத்திரிகை ஒன்றைத் தொடங்கி, நாட்டில் சுதந்தர உணர்ச்சியைத் தூண்டினார். அதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இவரைக் கைது செய்தது; பத்திரிகையையும் பறி முதல் செய்தது. .இவர் இந்திய தேசீயக் காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். 1947-ல் இந்தியா சுதந்தரம் பெற்ற பின் னர், ஆசாது மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சரானார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்; நல்ல பேச்சாளர். குர்ஆன் என்னும் முஸ்லிம் வேதத்துக்கு உரை ஒன்றை எழுதியுள்ளார். இலக்கியத்தைப் பற்றியும், தத்துவத்தைப் பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். இவர் 1958 பிப்ரவரி 2ஆம் நாள் கால மானார். புகழ் பெற்ற இந்தியத் தலைவர் களில் இவரும் ஒருவர். திபெத்து பூட்டான் பிரம்மபுத்திரா 'கௌஹாத்தி ஆ ஷில்லாங் செரபுஞ்சி கிழக்குப் பாக்கிஸ்தான் ரிபுரா ஆ சா மணிப்பூர் CO 37 ஆசாம்: இந்தியாவின் 17 மாநிலங் களில் ஆசாம் ஒன்றாகும். இது இந்தியாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இயற்கை அழகு நிரம்பியது. இமயமலைத் தொடர் இம்மாநிலம் வழியாகச் செல்லு கின்றது. மிக உயர்ந்த மலைகளையும், அடர்ந்த காடுகளையும் இங்குக் காணலாம். இங்கெல்லாம் யானைகளும், காண்டா மிருகங்களும் வாழ்கின்றன. தேயிலையும், ரப்பரும் காட்டில் விளையும் பொருள்கள். மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் மரங் கள் இங்கு ஏராளமாக வளர்கின்றன. பிரம்மபுத்திரா ஆறு ஓடுவதால் ஆசாமில் நீர்வளம் மிகுதி. உலகத்திலேயே அதிக மழை பொழியும் செரபுஞ்சி என்ற இடம் இங்குதான் உள்ளது. இங்கு ஓராண்டில் சராசரி 429 அங்குலம் மழை பெய்கிறது. ஆற்றுச் சமவெளிகளில் நெல்லும் சணலும் பயிராகின்றன. ஆசாமில் நிலக்கரியும் மண் TS ஆசாமில் தேயிலை ஏராளமாகப் பயிராகின்றது