பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உனக்கொன்று
56

ம்பி! உனக்கொன்று சொல்வேன்;-நன்றாய்ச்
சாப்பிட்டு விளையாடி வலிவெய்திக் கொள்ளு!
தெம்பான உடற்கூட்டி னுள்ளே-போற்றும்
சிறப்பான அறிவுண்டு சோம்பலைத் தள்ளு! 1

உன்மொழி தனித்தமிழ் ஆகும்!-அதை
உயர்த்திப் பிறமொழி நீக்கிடல் வேண்டும்!
உன்னாடு செந்தமிழ் நாடு!-அதை
உடன்பெற நாடோறும் ஆவன தேடு!2

பஞ்சம் பசிப்பிணி போக்க-மற்றும்
பலசாதி மதக்கேடு யாவையும் நீக்கக்
கொஞ்சமும் நீயஞ்ச வேண்டாம்!-இந்தக்
கொடுமைகள் அற்றாலே ஒற்றுமை உண்டாம்! 3

நாட்டிற் செழுமை குலுங்க-மக்கள்
நல்லற மாண்பினில் நாளு மிலங்க
விடெலாம் தொழில்செய வேண்டும்!-இதை
விளையாடும் போதெல்லாம். நீஎண்ண வேண்டும்! 4


120 கவிஞர் வாணிதாசன்