பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62

தலையைச் சீவிப் பொட்டிட்டுச்
சட்டை போட்டு மையிட்டுப்
பலகை புத்தகம் பைகொடுத்துப்
பள்ளிக் கனுப்புவாள் தாயாரும்!

1

‘கண்ணே! மணியே! வழியினிலே
கால்வாய் உண்டே! பாலமுண்டே;
விண்ணின் நிலவே! பாலத்தின்
மேலே ஏறிப் பார்க்காதே!'

2

என்றே அடிக்கடி தாய்சொல்வாள்;
ஏகும் முன்பும் அதேசொல்வாள்!
நின்று பார்க்கும் சிறுபிள்ளை
தாயின் சொல்லை நினைக்காமல்!

3


134 ♦ கவிஞர் வாணிதாசன்