பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழன் கொடையே பால்ஏனம்!
தமிழன் பண்பே பூங்கானம்!
தமிழன் சிறப்பே முன்வானம்!
தமிழன் உயிரே தன்மானம் !

4


தமிழன் துயரில் கலங்கானே!
தமிழன் பிறர்பொருட்(டு) ஏங்கானே!
தமிழன் உழைப்பான்; தூங்கானே!
தமிழன் கொடுப்பான்; வாங்கானே!

5

தமிழன் அறியான் சிறுகள்ளம்!
தமிழன் கண்கள் அருள்வெள்ளம்!
தமிழன் உள்ளம் தனிஉள்ளம்!
தமிழன் மொழியே தேன்பள்ளம்!

6

தமிழன் பிறர்நல மழைகாற்று;
தனையேய்ப் பவர்க்கோ சுழற்காற்று!
தமிழன் மாற்றார்க்(கு) அனற்காற்று!
தமிழன் என்றும் குளிர்காற்று!

7

தமிழன் தெய்வம் தனித்தெய்வம்!
தமிழன் காதல் தனிக்காதல்! -
தமிழன் வீரம் தனிவீரம்!
தமிழன் பண்பு தனிப்பண்பே!

8


குழந்தை இலக்கியம் ♦ 157