பக்கம்:கேரக்டர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

'திப்பு செய்த தப்பு'ன்னு பேரு ஒன்பதே எழுத்திலே அமைஞ்சு போச்சு! இல்லாதபோனா 'ச்'சன்னா ஒண்ணு சேர்த்து, 'திப்புச் செய்த தப்பு'ன்னு பெயரை மாத்தவேண்டி, யிருந்திருக்கும்.

மூலக் கதை ஆசிரியர் நாகபூஷணம்னு போட்டுவிட்டு, டயலாக்கெல்லாம் நம்ம கோபால்சாமியை விட்டு எழுதிக்கலாம்பா. நம்ம சிநேகிதர்களுக்கெல்லாம் சொல்லிடு. அடுத்த ஞாயிற்றுக்கிழமையே நாடக மன்றத்தை ஆரம்பிச்சுடலாம்.

நம்ம அமெச்சூர் நாடக மன்றத்துக்குப் பேர்கூடத் தீர்மானச்சுட்டேம்பா, சதர்ன் ரெயில்வேஸ் கூட்ஸ் ஷெட் ஆபீஸர்ஸ் அமெச்சூர் டிரமாடிக் அஸோஸியேஷன்! தன்னடா பேரு கூட்ஸ் வண்டி மாதிரி நீளமா இருக்குதேன்னு பாக்கறயா? அது பரவாயில்லை; எஸ்.ஆர்.ஜி.ஓ.ஏ.டி.ஏ. அளிக்கும் முதல் சரித்திர நாடகம்— திப்பு செய்த தப்புன்னு தான்—போஸ்டர்!

பாரு, இன்னும் இரண்டே மாசத்திலே இந்த நாடகத்தை அரங்கேத்தாட்டா என் பேரு ஆராவமுது இல்லே. ஆமாம்; எல்லா சபா செக்ரிடரிங்களையும் முதல் நாடகத்துக்கே 'இன்வைட்' பண்ணப் போறேன். ரிஹர்ஸலுக்குக் கூட ஓர் இடம் யோசிச்சு வெச்சிருக்கேம்பா. ஏ.பி.எலிமெண்டரி ஸ்கூல் இல்லே? அது கோடை வீவுக்கு ரெண்டு மாசம் பூட்டித் தான் இருக்கப் போவுது. அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டரை எனக்கு நல்லாத் தெரியும். அவரைப் புடிச்சா அந்த இடம் கிடைச்சுடும். ஹெட்மாஸ்டருக்கு ஒரு பேமிலி பாஸ் குடுத்துட்டாப் போச்சு.

இன்னைக்கு ஒன் அண்டு டூவிலே சந்திக்கலாம். ராமாநுஜம். சுந்தரம், பார்த்தசாரதி, கோபால்சாமி, கமால் பாஷா, எஸ்.கே. அய்யங்கார் எல்லாரையும் மீட் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுவோம். எஸ். கே.யைத்தாம்பா ஹீரோயினாப் போடலாம்னு உத்தேசம். கமால் பாஷாவைத் திப்புவாப் போட்டுடலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/122&oldid=1481160" இலிருந்து மீள்விக்கப்பட்டது