பக்கம்:கேரக்டர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

களிடம் காது மூக்கு வைத்துக் கதை அளப்பது அவனுடைய பெரிய பொழுதுபோக்கு. "டேய், இன்னிக்கு 'தர்ட்டி சிக்ஸ் எய்ட்டி ஒன்' லே சம்பனா தேவியைப் பார்த்தேண்டா. மேக்கப் போடே போறா... ஷூட்டிங்குக்குப்போறாப் போலேயிருக்குடா" என்பான்.

சினிமாப் பத்திரிகைகளில் கேள்வி — பதில் பகுதியைத் துருவித் துருவிப் படிப்பான். தான் எழுதிப்போட்ட கேள்விக்கு பதில் வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு பத்திரிகையாக வாங்கி பார்த்து ஏமாந்து போவான்.

ஒரு நாள் அவன் 'டேபிலு'க்கு டிபன் சாப்பிட வந்த ஒருவரைப் பார்த்து. "சார். நீங்க சினிமா ஸ்டார் மோகனா தேவியின் பிரதர்தானே?" என்றான்.

"என்னை உனக்கு எப்படித் தெரியும்,தம்பி?"

"என்னா சார்! இதுகூடவா தெரியாது! வெளியே நிக்குதே சார், ஸ்டூடிபேக்கர்... அவங்க காரு. ஏன் சார் ! 'பிளிமத்'தை வித்துட்டாங்களா?...உங்க வீட்டுக் கிருகப்பிரவேசத்துக்குப் பார்ட்டி கொடுத்தீங்களே, அன்னிக்கு நான் வந்திருந்தேன், சார்! எல்லா சினிமா ஸ்டாருங்களையும் பார்த்தேன். பத்மினி, ராகினிகூட வந்திருந்தாங்களே, அன்னிக்குத்தான் எல்லா ஸ்டாரையும் சேர்ந்தாப்போலே பார்த்தேன். எல்லார்கிட்டேயும் ஆட்டோகிராப்கூட வாங்கினேன். பாலையாகூட எங்கிட்டே பேசினாரே!

"அன்னிக்கு எங்க ஓட்டல்தானே கேட்டரிங். அதுக்கப் புறம் உங்களை வந்து பங்களாவிலே பாக்கவே முடியலீங்க. கூர்க்கா உள்ளேயே விடமாட்டேங்கறான்! ஒண்ணுமில்லே... எனக்கு ஒரு பிக்சர்லே சான்ஸ் வாங்கிக் கொடுக்கணும், சார்! நீங்க மனசு வைத்தால் முடியும்... நான் அமெச்சூர் டிராமாவிலெல்லாம் நடிச்சிருக்கேன். நிறையப் போட்டோகூட எடுத்து வெச்சிருக்கேன்...!"

"ஏம்பா! இந்த சர்வர் வேலை உனக்குப் பிடிக்கலையா, எதுக்கு, சினிமாவிலே சேர்ந்து அவஸ்தைப் படணுங்கிறே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/18&oldid=1478763" இலிருந்து மீள்விக்கப்பட்டது