பக்கம்:கேரக்டர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பொம்பளை அழுவற சத்தம் கேக்குது. நடுப்புற ஆம்பளைக் குரலும் கேக்குது.

"கம்மலைக் கழட்டிக் குடுக்கப் போறயா, இல்லே உதை வாங்கப் போறயான்னு" ஒரே அடியா கலாட்டா பண்றான் அவன். அதுவோ 'லபோ திபோ'ன்னு அடிச்சுகிணு அழுவுது: பாவம்!

"நீ என்னை வீட்டைவிட்டு அடிச்சித் துரத்தி ஆறுமாசம் ஆவுது. இங்கே ஏன் வரே நீ? எங்கண்ணங்காரன் சேஞ்சு போட்ட கம்மல் இது. நீ என்னை வெட்டிப் போட்டாலும் சரி, குடுக்கமாட்டேன்'னுது

"இவன் அத்தோட வுட்டுட்டுப் போக வேண்டியது தானே? கம்மலைக் கழட்டிக் குடுத்தாத்தான் ஆச்சுன்னு அடாவடித்தனம் பண்றான். இன்னாடா அக்குரும்பு இது? எனக்குப் பொறுக்கல்லே; நான் ரவுடிதான். ஆனா நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். உள்ளே அப்படியே பாஞ்சி அவனை இழுத்து வந்து வெளியே போட்டேன். இலன் என்னைக் கண்டுட்டுத் திக்குமுக்காடறான். 'இன்னாடா... சோம்பேறி! கம்மலா வோணும் ஒனக்கு? இந்தா வாங்கிக்கோன்னு' உட்டேன் பாரு ஒண்ணு,அப்படியே கீழே குந்திக்கினான்.

"டேய், மரியாதையா இந்த இடத்தை உட்டுப் போயிடு. இல்லாட்டி நான் பொல்லாதவனாயிருப்பேன். யாரும் இல்லாத நேரத்திலே ஒரு பொம்பளை கிட்டே வந்து கலாட்டாவா பண்றே? சோமாறி! பாவம், பச்சைப் பொண்ணு! அதை வெச்சுக் காப்பாத்தத் துப்பு இல்லே உனக்கு. போடா கைராத்து! இன்னாடா மொறைக்கிறே? நீ பெரிய சீமானா? சார்பட்டா பரம்பரை வஸ்தாதா? போடாஆ! கையிலே இன்னா இருக்குதுனு பார்த்துகினியா? அப்படியே சீவிடுவேன், சீவி! நம்பகிட்டயா கமால் காட்றே நீ? நட்டைக் கயிட்டிடு வேன் ராஸ்கோல்னேன்!"

"இதுக்குள்ளே அக்கம்பக்கமெல்லாம்'ஜேஜே'ன்னு கூடிப்போச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/26&oldid=1478822" இலிருந்து மீள்விக்கப்பட்டது