பக்கம்:கேரக்டர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



96

ஸார்! வெள்ளைக்காரன் இருந்த வரைக்கும்தான் இந்த டவாலிங்களுக்கு ரெஷ்பெக்ட்! இப்ப ஜிப்பா போட்டுக்கினு 'ஈஜி'யா கலெக்டரா வந்துடறாங்க. கலெக்டரும் ஜிப்பா குமாஸ்தாவும் ஜிப்பா, பாக்க வறவங்களும் ஜிப்பா!— ஆனை குதிரை எல்லாம் ஒண்ணாயிட்டுதே ஸார்? ஒரு மரியாதை வாணாம் ஸார்? இன்னா பேசாமே நிக்கறியே, நீ சொல்லு ஸார்! அதுதான் போவுதுன்னா கண்ட 'சோக்ரா' பசங்களெல்லாம் 'டவாலியா' வந்துடறானுவ. இங்கிலீஷ்கூடச் சரியாப் பேசத் தெரியல்லே இவனுங்களுக்கு? இன்னா பசங்க, ஸார், இவன்க? தான் நல்லா இங்கிலீஷ் பேசுவேன்! நான் பேசறது தொரைக்கு புரியும். தொரை பேசறது எனக்குப் புரியும்!

"பஞ்சம் வந்தது பார் ஸார், பஞ்சம், அப்ப ஹவ் தொரை தான் கலெக்டர். அவன் ஒரு கெடுபிடி ஆள்.பங்கா இழுக்கணும்பான். 'என்னா மேன் பட்டன்சுக்குப் பாலிஷ் போடலே’ம்பான். என் பட்டனுக்கு பாலிஷ் போடலேன்னா இவனுக்கு என்னா ஸார் வந்தது? ஐய, இப்படி எடுத்ததுக்கெல் லாம் ஆட்பூட் இம்பான், ஸார். நான் பயந்துக்க மாட்டேன். 'நீ போடா கொருங்கு மூஞ்சி'ன்னு தமிழ்லே திட்டிப் புடுவேன் ஸார். அவனுக்கு என்ன புரியப் போவது?

"ஒருநாள் சொல்றான் ஸார், இங்கிலீஷ்லேதான்; 'இந்த லெட்டரைக் கொண்டுபோய் ஜோன்ஸ் தெரு ரோஸ்கிட்டே குடுத்திட்டு வா'ன்னு!' பிரிச்சுப் பாக்கறேன், லவ் லெட்டர்! முடியாதுன்னுட்டேன். என் டூடி இதுவா ஸார்? இவன் இன்னா செய்யமுடியும் என்னை!

"ஜோன்ஸ் தெரு ரோஸ் யார் தெரியுமா? ஆங்கிலோ இண்டியன்ஸ் பெண்ணு ஸார். இவனுக்கு வயசு பிப்டி ஆவது. கடாமாதிரி. பாவம், அது ஒரு ஸ்டூடண்ட்ஸ் பொண்ணு, ஸார்! இவனுக்கு என்ன ஸார் அதுங்கிட்டே லவ்வு, கிளியாட்டமா தொரைசானி இருக்கச்சே!

"நான் முடியாதுன்னேன் பாரு, அவ்வளாதான், கரம் வச்சிக்கினான் ஐயா! அண்ணிக்கிலேருந்து எம் மேலே பாஞ்சுக்கிட்டேயிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/96&oldid=1481074" இலிருந்து மீள்விக்கப்பட்டது