பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

பெயருள்ளவர் சிலர் இருந்தனர். செல்வக் கடுங்கோ (வாழி யாதன்), மாந்தரன் பொறையன் கடுங்கோ , பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்று சிலர் இருந்தனர். கடுங்கோ என்பது இவருடைய பெயர். இவருக்குப் பிறகு இளங்கடுங்கோ ஒருவர் இருந்தார். பாலைத் திணையைப் பற்றிய செய்யுட்களைப் பாடினபடியால் இந்தச் சிறப்பையுஞ் சேர்த்துப் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று பெயர் பெற்றார்.

கொங்கு நாட்டைச் சேர்ந்த புகழூர் ஆறு நாட்டார் மலையில் உள்ள இரண்டு பழைய பிராமிக் கல்வெட் டெழுத்துகள் பெருங்கடுங்கோ இளங்கடுங்கோக்களைக் கூறு கின்றன. ‘அமணன் ஆற்றூர் செங்காய்யன் உறைய கோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்’ என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம்.

இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற பெருங்கடுங்கோன், பாலைபாடிய பெருங்கடுங்கோவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால் இவருடைய தந்தை, கோஆதன் சேரலிரும் பொறையாவான். கோஆதன் சேரலிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோனுக்கு இளங்கடுங்கோ என்று பெயருள்ள ஒரு மகன் இருந்தான் என்பதை இந்தக் கல் வெட்டு எழுத்தினால் அறிகிறோம். இந்த இளங்கடுங்கோவும் மருதம் பாடிய இளங்கடுங்கோவும் ஒருவராக இருக்கலாமோ?

பாலை பாடிய பெருங்கடுங்கோவின் அறுபத்தெட்டுச் செய்யுட்கள் சங்கத்தொகை நூல்களில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகநானூற்றில் பன்னிரண்டும் (அகம் 5, 99, 111, 155, 185, 223, 281, 267, 291, 313, 337, 379), கலித்தொகையில் முப்பத்தைந்தும் (பாலைக்கலி முழுவதும்), குறுந்தொகையில் பத்தும் (குறும். 16, 37,