பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

காலத்தில் சதுரகிரி என்று பெயர் கூறுகிறார்கள். பார்வைக் குச்சதுர வடிவமாக அமைந்திருப்பதனால் சதுரகிரி என்று பெயர் பெற்றது. கொல்லிமலை, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்திலும் நாமக்கல் வட்டத்திலும் அடங்கியிருக்கின்றது. ஏறக்குறைய 180 சதுர மைல் பரப்புள்ளது. கொல்லி மலைகள், கடல் மட்டத்துக்கு மேலே 3,500 அடி முதல் 4,000 அடிவரையில் உயரம் உள்ளன. கொல்லி மலைகளில் வேட்டைக்காரன்மலை (ஆத்தூர் வட்டம்) உயரமானது; அது கடல் மட்டத்துக்கு மேலே 4,663 அடி உயரமாக இருக்கிறது.

கொல்லி மலைகளில் ஊர்கள் உள்ளன. பல அருவிகளும் உள்ளன. மலையிலேயே தினை, வாத, ஐவன நெல் முதலிய தானியங்கள் பயிரிடப்பட்டன, மலே களிய மூங்கிற் புதர்களும், சந்தணமும், கருங்காலி, தேக்கு முதலிய மரங்களும் வளர்ந்தன. அக்காலத்தில் தேக்கு மரம் இல்லை. பலா மரங்கள் இருந்தன.[1] கொல்லிமலைத் தேன் பேர்போனது.

பிற்காலத்து நூலாகிய கொங்குமண்டல சதகமும் கொல்லி மலேயைக் கூறுகிறது.

“முத்தீட்டு வாரிதி சூழல கத்திணின் மோகமுறத்
தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள்ளோர்க்குஞ்
                                                       சுவைமதுரக்
கொத்தீட் டியபுதுப் பூத்தேனும் ஊறுங்
                                                    ‘குறிஞ்சியின் தேன்’
வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு
                                                         மண்டலமே’


  1. “பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி.”(அகம். 208: 22) “செல் வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.” (நற். 201:5