பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

காமல் சுதந்திரமாக அரசாண்டான். பெருஞ்சேரல் இரும்பொறை காமூரை வெல்ல எண்ணிக் காமூரின்மேல், போருக்குச் சென்றான், காமூர் பலமான கோட்டையுடையதாக ஆழமான அகழியையும் பலமான மதிற்சுவர்களையுங் கொண்டிருந்தது. பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுளுடன் போர் செய்து காமூரை வென்றான். கழுவுள் தோற்றுப் பெருஞ்சேரலுக்கு அடங்கினான்.[1]

காமூர் அரசனாகிய கழுவுள் எளிதில் பணியவில்லை, பெருஞ்சேரல் இரும்பொறைக்குச் சார்பாகப் பதினான்கு வேள் அரசர் போர் செய்து காமூரை வென்றனர். இந்த விபரத்தைப் பரணர் கூறுகிறார்.[2] அந்தப் பதினான்கு வேளிரின் பெயர்கள் தெரியவில்லை.

கொல்லிப் போர்

பெருஞ்சேரலிரும்பொறை செய்து வென்ற இன்னொரு பெரிய போர் கொல்லிப் போர். கொல்லி மலைகளும் கொல்லி நாடும் கொல்லிக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்தன. அதை ஓரி என்னும் அரசன் சுதந்தரமாக அரசாண்டு வந்தான். ஓரி, புலவர்களை ஆதரித்த வள்ளல், பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியுடன் போர் செய்து வென்று அந்த


  1. “குண்டுகண் அழிய குறுந்தண் ஞாயில், ஆரெயில்
    தோட்டி. வௌவினை ஏறொடு, கன்றுடை யாயந் தரீ இப்
    புகல்சிறந்து, புலவுவில் இளையர் அங்கை விடுப்ப,
    மத்துக் கயிறாடா வைகற் பொழுது நினையூஉ, ஆன்
    பயன் வாழ்நர் கழுவுள் தலை மடங்கப், பதிபாழாக.”
    (8-ஆம் பத்து 1 : 12-18)

  2. "வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடை, ஈரெழு
    வேளிர் இயைந்தொருங் கெறிந்த, கழுவுள் காமூர்."
    (அகம். 135 :11-13)