பக்கம்:கோயில் மணி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுறவு

“இன்னிக்கு மாலை மூணு மணிக்கு மீட்டிங் இருக்குதுன்னு ரமணியம்மா சொல்லச் சொன்னாங்க” என்று ஆயா வள்ளி சொன்னாள்.

“நான் எங்கேதான் போகிறதென்று தெரியவில்லை. இதோ பத்து மணிக்கு மகாநாட்டுக் காரியக்கமிட்டிக்குப் போக வேண்டும். பன்னிரண்டு மணிக்கு மகளிர் சபையின் கூட்டத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்ட முதல்அமைச்சர் வருகிறார். அங்கே போய்த் தலை காட்ட வேண்டும். மூன்று மணிக்குக் கண்காட்சிக் கமிட்டிக் கூட்டம்; அதைத்தான் அந்த அம்மாள் சொல்லியிரூக்கிறாள். சரியாக ஐந்து மணிக்குக் காட்டு மாளிகையில் விருந்து. அங்கே முக்கியமானவர்கள் வருகிறார்கள். நான் அரை மணி பேச வேறு வேண்டும். ஏழு மணிக்குக் குழந்தைப் படக் காட்சியைப் பார்த்து என் கருத்தைச் சொல்ல வேண்டும்.”

“ராத்திரி பத்து மணிக்கு இன்று என்னவோ முக்கியமான வேலை இருக்கிறதென்று சொன்னீர்களே!” என்று அப்போது அங்கே வந்து நின்ற சமையற்கார அம்மாள் நினைவூட்டினாள்.

“ஆமாம், ஆமாம்; எதற்குப் போனாலும் போகா விட்டாலும் அதற்குத்தான் அவசியம் போக வேண்டும். குழந்தை வளர்ப்பைப் பற்றி ஒரு பெரிய புத்தகம் வெளியிட எங்கள் அன்னைமார் சங்கம் தீர்மானித்திருக்கிறது. நிதானமாக இருந்து ஆராய்ந்து இன்னார் இன்ன பகுதி—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/139&oldid=1384213" இலிருந்து மீள்விக்கப்பட்டது