பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

க. அயோத்திதாஸப் பண்டிதர்



வரிவடிவில்லாமல், ஒலிவடிவாம் மிகடபாஷையாகும் பாலி பாஷை வழங்கிவந்தபடியால், மேற்கூறியுள்ள மூன்று பேதவாக்கியங்களையும் ஒருவர் நாவினாலோதவும், மற்றோர் செவியினாற் கேட்கவு மிருந்தது கொண்டு அவற்றை சுருதி வாக்கியங்களென்றும் வழங்கிவந்தார்கள்.

சுரோத்திராதித்தே சுருதி

வரிவடிவாம் அட்சரபாஷையிராது ஒலிவடிவிலிருந்ததால் சுருதி வாக்கியங்களின் அந்தரார்த்தம் விளங்காது, மறைந்திருந்தது, மறைகொண்டு மறையென்றும் வழங்கி வந்தார்கள்.

இம்மூன்று பேதவாக்கியங்களின் உட்பொருளாம், பாபஞ் செய்யாமலிருங்கோளென்பதை கர்மபாகையென்றும், நன்மைக் கடைபிடியுங்களென்பதை அர்த்தபாகை யென்றும், இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பதை ஞானபாகையென்றும் வழங்கி வந்தார்கள். இம்முப்பாகையும் தன் தேகத்துள் நிகழ்வனவாதலின் இவற்றை அறம், பொருள், இன்பமென்றும் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்ப மென்றும் வழங்கி வந்தார்கள்.

சீவகசிந்தாமணிசெய். 1242

ஆதிவேதம் பயந்தோய் நீ யலர்பெய்மாரி யமர்ந்தோய்
நீதிநெறியை யுரைத்தோய் நீ நிகரில் காட்சிக்கிரையோய் நீ :நாதனென்னப்படுவோய் நீ நவைசெய் பிறவிக்கடலகத்துன்
பாதகமலர் தொழுவெங்கள் பசையாப்பவிழப் பணியாயே.


திருக்கலம்பகம் செய். 78

ஒதாதுலகிற் பொருளனைத்து முடனே
யுணர்ந்தா லுணர்ந்தவற்றை
வேதாகமங்களா றேழால்
விரித்தான் விமலன் விரித்தளவே
கோதார் நெஞ்சத்தவர் பிறழக்
கொண்டேதாமே கண்டார்போற்
பேதா, பேதம், பேதமெனப்
பிணங்கா நின்றார் பிரமித்தே